02 ஏப்ரல் 2007

தரமிறங்குகிறதா பா.ம.க?


Photo Sharing - Upload Video - Video Sharing - Share Photos


நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியார் அணை விவகாரங்களே இன்னும் தீராத நிலையில் பா.ம.க. தலைவர் இதுபோன்ற ஒன்றுக்கும் பொறாத விஷயங்களுக்கெல்லாம் போராட்டம் நடத்துவது தேவைதானா.

அதுசரி அதென்ன ஐந்து வருட தடை! விளங்கவில்லை.

இந்த நேரத்தில் தன்னுடைய மருத்துவமனையிலமர்ந்து நாலு ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்தாலாவது புண்ணியம் கிடைக்கும்..

34 கருத்துகள்:

  1. // இந்த நேரத்தில் தன்னுடைய மருத்துவமனையிலமர்ந்து நாலு ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்தாலாவது புண்ணியம் கிடைக்கும்..//

    என்ன செய்தால் தேர்தலில் மக்களின் வாக்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் அதைச் செய்கிறோம். :-)

    பதிலளிநீக்கு
  2. சினிமா எதிர்ப்பு என்ற போர்வையில் ரஜினி காந்த்தின் பாபா படப்பொட்டிய தூக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததற்கு பாமக கோட்டையான விருத்தாசலத்தில் பாமகவுக்கு விசய் காந்து பாடம் காட்டினார்!

    தன் வீட்டுச் பேரக்குழந்தைச் செல்லங்கள், சின்ன ஐயா அன்புமணி ராமதாசையே கிரிக்கெட் பார்க்காமல்
    மருத்துவராஅல் முதலில் இருக்கச்செய்ய முடியுமா?

    கிரிக்கெட் போதை மோகம் அழியவேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை! ராமதாசின் மெய்யான அக்கறையில் சந்தேகம் வரத்தான் வருகிறது!

    பதிலளிநீக்கு
  3. திடீரென்று உங்கள் ப்ளாக்கில் இப்படி ஒரு பதிவைப் பார்த்தவுடன் வேறு ஒருவருடைய பதிவுக்குத்தான் வந்துவிட்டேனோ என்று குழம்பி விட்டென்.

    வாங்க வாங்க தினமும் இந்த மாதிரி பிரச்னைகளை பற்றி பேசலாம்

    <----
    இந்த நேரத்தில் தன்னுடைய மருத்துவமனையிலமர்ந்து நாலு ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்தாலாவது புண்ணியம் கிடைக்கும்..
    --->
    இப்படியெல்லாம் பார்த்தா அவர் எப்படி கட்சி நடத்தறதாம்!

    பதிலளிநீக்கு
  4. வாங்க லதா,

    என்ன செய்தால் தேர்தலில் மக்களின் வாக்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் அதைச் செய்கிறோம். //

    அதுவும் சரிதான்..

    அவங்கவங்க கவலை அவங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  5. வாங்க ஹரி,

    ராமதாசின் மெய்யான அக்கறையில் சந்தேகம் வரத்தான் வருகிறது! //

    அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்..

    பதிலளிநீக்கு
  6. வாங்க சிவா,

    திடீரென்று உங்கள் ப்ளாக்கில் இப்படி ஒரு பதிவைப் பார்த்தவுடன் வேறு ஒருவருடைய பதிவுக்குத்தான் வந்துவிட்டேனோ என்று குழம்பி விட்டென்.//

    முந்தியெல்லாம் செய்யறதுதான்.. இடையில கொஞ்சம் நாள் விட்டுட்டேன்..

    வாங்க வாங்க தினமும் இந்த மாதிரி பிரச்னைகளை பற்றி பேசலாம்//

    முடிஞ்ச அளவுக்கு வரேன்.. பேசலாம்.

    <----
    இந்த நேரத்தில் தன்னுடைய மருத்துவமனையிலமர்ந்து நாலு ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்தாலாவது புண்ணியம் கிடைக்கும்..
    --->
    இப்படியெல்லாம் பார்த்தா அவர் எப்படி கட்சி நடத்தறதாம்! //

    கரெக்டா சொல்லிட்டீங்க.. அதுதான் முக்கியமான காரணம்.

    பதிலளிநீக்கு
  7. ஆமாம், பெரிய தரம் இருந்தது, இப்போ இறங்கறத்துக்கு.இந்த கும்பல் எப்பவுமே ஒரு ஜாதி வெறி பிடித்து அலையும் ரெளடி கும்பல்.

    பாலா

    பதிலளிநீக்கு
  8. பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று அய்யா கோருவதில் நியாயம் இருப்பதாகவே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க பாலா,

    ஆமாம், பெரிய தரம் இருந்தது, இப்போ இறங்கறத்துக்கு.இந்த கும்பல் எப்பவுமே ஒரு ஜாதி வெறி பிடித்து அலையும் ரெளடி கும்பல்.//

    ஒங்களுக்கு ரொம்பவே தைரியம்தான்..

    பதிலளிநீக்கு
  10. வாங்க லக்கி,

    பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று அய்யா கோருவதில் நியாயம் இருப்பதாகவே நினைக்கிறேன்//

    அதுக்கு ஏதாச்சும் செய்யுங்க ஒத்துக்கறேன்..

    அதுக்கு இந்தியான்னு பெயர் பொறித்திருக்கும் சட்டையை அணிவித்து சிலரை கழுதையில் ஏற்றி வருவதும் அவர்களை சிலம்பாட்டக்காரர்கள் கோலால் அடிப்பதுபோல் காட்டுவதும்...

    இதெல்லாம் ஒரு தேசிய தலைவர் செய்யற காரியமாங்க..

    பதிலளிநீக்கு
  11. பாமகவின் அணுகுமுறை எப்பொழுதும் இது போன்ற வகையில்தான் இருந்திருக்கிறது என்பது என் கருத்து. குஷ்பூவாகட்டும் தமிழாகட்டும் இப்பொழுது கிரிக்கெட்டாகட்டும்...இதனாலேயே அது சொல்ல வருவது திசை மாறிப் போய்விடுகிறது. அந்தக் கட்சியின் கொள்கைகள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகையால் அதில் எவ்வளவு நல்லது கெட்டது என்று விவாதிக்க என்னால் முடியாது. ஆனால் இது போன்ற செயல்களை விடுப்பது நன்று என்பதே என் கருத்து.

    அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வெறி அளவுக்கு மீறிப் போயிருந்ததையும் சொல்லியே ஆக வேண்டும். விளையாட்டு வீரர்களைக் கதாநாயகர்களாக்கிக் கடவுளாக்கிக் கொண்டாடிய முட்டாள்தனத்தின் விளைவு...கிரிக்கெட் வீரர்களின் இன்றைய பேச்சு. தன்னுடைய நடத்தையைப் பற்றி இதுவரை ஒருவரும் குறை கூறியதில்லை என்று நாடகம் போடுகிறார்கள். ஆனால்..அந்த வீரர்களை அப்படிக் கொண்டாடியதன் பலன் இதுவரை யாரும் குறையைச் சுட்டிக்காட்டவில்லை. இன்று ஒருவர் சுட்டிக்காட்டியதும் சுருக்கென்று கோவம் வருகிறது. கண்ணீர் வருகிறது. அந்த மாநிலத்து நாளிதழும் பேட்டி எடுத்து அவர்கள் மேல் ஒரு பரிதாபத்தை வரவழைக்க முயற்சி எடுக்கிறது. இன்றைய நிலையில் இந்திய விளையாட்டுத் துறையின் சாபக்கேடு கிரிக்கெட் என்பது மறுக்க முடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராகவன்,

    அந்தக் கட்சியின் கொள்கைகள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகையால் அதில் எவ்வளவு நல்லது கெட்டது என்று விவாதிக்க என்னால் முடியாது. ஆனால் இது போன்ற செயல்களை விடுப்பது நன்று என்பதே என் கருத்து.//

    அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கத்தான் செய்யும். அதை வெளிக்காட்டுவதிலும் தவறில்லை. ஆனால் அதற்கு கழுதை சவாரி தேவைதானா?

    அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வெறி அளவுக்கு மீறிப் போயிருந்ததையும் சொல்லியே ஆக வேண்டும். விளையாட்டு வீரர்களைக் கதாநாயகர்களாக்கிக் கடவுளாக்கிக் கொண்டாடிய முட்டாள்தனத்தின் விளைவு...கிரிக்கெட் வீரர்களின் இன்றைய பேச்சு. தன்னுடைய நடத்தையைப் பற்றி இதுவரை ஒருவரும் குறை கூறியதில்லை என்று நாடகம் போடுகிறார்கள். ஆனால்..அந்த வீரர்களை அப்படிக் கொண்டாடியதன் பலன் இதுவரை யாரும் குறையைச் சுட்டிக்காட்டவில்லை. இன்று ஒருவர் சுட்டிக்காட்டியதும் சுருக்கென்று கோவம் வருகிறது. கண்ணீர் வருகிறது. அந்த மாநிலத்து நாளிதழும் பேட்டி எடுத்து அவர்கள் மேல் ஒரு பரிதாபத்தை வரவழைக்க முயற்சி எடுக்கிறது. இன்றைய நிலையில் இந்திய விளையாட்டுத் துறையின் சாபக்கேடு கிரிக்கெட் என்பது மறுக்க முடியாத உண்மை. //

    சாபக்கேடுங்கறதெல்லாம் பெரிய வார்த்தை. ரசிகர்களென்றால் உலகம் முழுவதும் அப்படித்தான். அது கிரிக்கெட் மட்டுமல்ல. கால்பந்து ரசிகர்கள் செய்யாத அட்டகாசமா? விளையாட்டு ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. இது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. உலகெங்குமுள்ள ரசிகர்களும் அப்படித்தான்.

    ஆனால் அதை பெரிதுபடுத்தி அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் இறங்குவதெல்லாம் அழகல்ல..

    இதுதான் சந்தர்ப்பம் என்று தாய்நாட்டிற்காக பல போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய மூத்த விளையாட்டு வீரர்களை பழித்துரைப்பதும் விவரமறிந்தவர்கள் செய்யக்கூடிய காரியமல்ல.

    பதிலளிநீக்கு
  13. பாபா பிரச்சனையிலாகட்டும் அல்லது கிரிக்கெட்டை தடை செய்யும் இந்த போராட்டத்திலாகட்டும் விளம்பர நோக்கம் மட்டுமே புலனாகிறது.

    //
    லக்கிலுக் said...
    பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று அய்யா கோருவதில் நியாயம் இருப்பதாகவே நினைக்கிறேன்.
    //


    அய்யாவின் கோரிக்கை நியாயமானது தான் அதை அடைய மிகத் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது தான் விமர்சிக்கப்படுகிறது நண்பரே.


    //இதெல்லாம் ஒரு தேசிய தலைவர் செய்யற காரியமாங்க.. //

    இத்தகைய நடவடிக்கைகள் அவர் தலைவரா என சந்தேகிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. வாங்க காளீஸ்வரன்,

    நீங்க சொன்ன கருத்துக்களுக்கு நானும் உடன்படுகிறேன்..

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. // டி.பி.ஆர்.ஜோசஃப் said...
    வாங்க ராகவன்,

    அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கத்தான் செய்யும். அதை வெளிக்காட்டுவதிலும் தவறில்லை. ஆனால் அதற்கு கழுதை சவாரி தேவைதானா? //

    நிச்சயமாகத் தேவையில்லை. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஆதரவு என்பது வேறு. இப்பொழுது இவர்கள் செய்திருப்பது என்பது வேறு. இது ஏற்கத்தக்கது அல்ல என்பதே என் கருத்தும்.

    // சாபக்கேடுங்கறதெல்லாம் பெரிய வார்த்தை. ரசிகர்களென்றால் உலகம் முழுவதும் அப்படித்தான். அது கிரிக்கெட் மட்டுமல்ல. கால்பந்து ரசிகர்கள் செய்யாத அட்டகாசமா? விளையாட்டு ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. இது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. உலகெங்குமுள்ள ரசிகர்களும் அப்படித்தான். //

    ரசிகர்கள் அப்படித்தான் என்று சொல்வது முழுமையாக சரியாகாது. உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்கள் பொறுப்பை உணர்ந்து நடக்கின்றார்கள். அந்தப் பொறுப்புணர்வு இப்பொழுது யாருக்கும் இருப்பது போலவே தெரியவில்லை. அதுவுமில்லாமல் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் பேராசை. விட்டால் ஐம்பது வயது வரைக்கும் மட்டையைத் தட்ட ஆசைப்படுகிறார்கள். ஏதோ கிரிக்கெட் மட்டையோடே பிறந்த நவீன கர்ணர்கள் போலப் பேச்சு வேறு.

    // ஆனால் அதை பெரிதுபடுத்தி அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் இறங்குவதெல்லாம் அழகல்ல.. //

    இது தவறென்று நானும் ஒத்துக்கொள்கிறேன்.

    // இதுதான் சந்தர்ப்பம் என்று தாய்நாட்டிற்காக பல போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய மூத்த விளையாட்டு வீரர்களை பழித்துரைப்பதும் விவரமறிந்தவர்கள் செய்யக்கூடிய காரியமல்ல. //

    பழித்துரைப்பது யார் என்பதையும் பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் அவையில் சொன்னது இத்தனை நாள் ஏறாமல் இன்று அம்பலத்தில் சொல்கின்றாரோ என்னவோ! எது எப்படியோ! இன்றைக்கு இருக்கும் சீனியர் விளையாட்டர்கள் வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  16. //தாய்நாட்டிற்காக பல போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய மூத்த விளையாட்டு வீரர்களை //

    நல்ல ஜோக் .இவர்கள் தாய்நாட்டுக்காக விளையாடி கிழிச்சது இருக்கட்டும் .குறைந்த பட்சம் தமக்கு விளம்பரம் மூலம் கோடி கோடியாக கிடைக்க காரணமாக இருந்த விளையாட்டை சிரத்தையோடும் நேர்மையோடும் விளையாடி இருக்கலாம் .தோல்வி பெறுவது இயற்கை .ஆனால் சமீப காலங்களில் பெற்றது தோல்வி அல்ல .பணத்திமிர் ,எகத்தாளம் ,அலட்சியம் ஆகியவற்றுக்கு கிடைத்த பரிசு.

    பதிலளிநீக்கு
  17. அதுவுமில்லாமல் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் பேராசை. //

    ஆசை யாருக்குத்தான் இல்லை. ஆனால் பணத்திற்காகவே இன்னும் விளையாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பதை வாதத்திற்காகவே எடுத்துக்கொண்டாலும் அப்படி நினைக்கும் வீரர்கள் தன்னுடைய விக்கெட்டைக் காப்பாற்றிக்கொள்ள போராடுவார்களே தவிர வீசியெறிந்துவிட்டு போய்விடமாட்டார்கள். முதல் சுற்றில் வெளியேறினால் தங்களுடைய விளம்பர வருமானம் போய்விட வாய்ப்புள்ளது என்பது அனைத்து மூத்த வீரர்களுக்கு தெரியாதா என்ன?

    உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்கள் பொறுப்பை உணர்ந்து நடக்கின்றார்கள். அந்தப் பொறுப்புணர்வு இப்பொழுது யாருக்கும் இருப்பது போலவே தெரியவில்லை. //

    இது உங்களுடைய வாதம். எந்த ஒரு வீரரும் முக்கியமாக சச்சின், சவுரவ், டிராவிட்.. தோற்பதற்கென்றே விளையாட மாட்டார். அதனால் அவருக்கென்ன பலன்?

    எது எப்படியோ! இன்றைக்கு இருக்கும் சீனியர் விளையாட்டர்கள் வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதில் ஐயமில்லை. //

    அவங்கவங்க வயசாச்சா போயிருவாங்க.. எத்தன பேர பாத்திருக்கோம். எல்லாருக்கும் ஓய்வு வரும்.. ஆனா அது ஒரு உலகக்கோப்பையில தோத்ததாலயே அவங்க மேல தினிச்சிரக் கூடாது..

    நம்மளோட வாதம் திசைமாறி போயிட்டுதுன்னு நினைக்கேன்.. இதுல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளோட செயல் மறஞ்சி போயிரக் கூடாது...

    பதிலளிநீக்கு
  18. //தாய்நாட்டிற்காக பல போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய மூத்த விளையாட்டு வீரர்களை //

    இது சுத்தமான வடிகட்டின பொய். இவர்கள் தாய்நாட்டுக்காக் விளையாடவில்லை. BCC க்காக விளையாடுகிறார்கள(கால்பந்து கிளப் போல்)். BCC பணத்திற்காக இந்தியாவிற்காக விளையாடுவதாக புருடா விட்டுகொண்டிருக்கிறது. இதனாலே இவர்கள் இந்திய கவர்மெண்டையும் பிளாக் மெயில் பண்ணுகிறார்கள். நம் மக்கள் முட்டாள்கள். BCC இன் முடிவுகளில் நம் அரசாங்கம் தலையிடமுடியாது.

    அப்புறம் மரம்வெட்டி. இப்படி பேசிபேசியே அவர உசுப்பி விட்டு ஏத்திவிடுறோம். ஏதொ பைத்தியக்காரன்னு கண்டுக்காம நாமபாட்டுக்கு போயிட்டே இருந்தா நாட்டுக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஜோ,

    நல்ல ஜோக் .இவர்கள் தாய்நாட்டுக்காக விளையாடி கிழிச்சது இருக்கட்டும் .குறைந்த பட்சம் தமக்கு விளம்பரம் மூலம் கோடி கோடியாக கிடைக்க காரணமாக இருந்த விளையாட்டை சிரத்தையோடும் நேர்மையோடும் விளையாடி இருக்கலாம் .தோல்வி பெறுவது இயற்கை .ஆனால் சமீப காலங்களில் பெற்றது தோல்வி அல்ல .பணத்திமிர் ,எகத்தாளம் ,அலட்சியம் ஆகியவற்றுக்கு கிடைத்த பரிசு. //

    உங்களுக்கு எப்படியோ தெரியாது ஜோ..

    ஆனா பள்ளிப்பருவத்தில ஸ்கூல் டீம்ல வெளையாடுனதுலருந்து எனக்கு கிரிக்கெட்னா உயிர்.

    இருபது வருசத்துக்கும் மேல இந்திய அணியின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் பார்த்துக்கிட்டு வந்தவன் நான்..

    அதனால என்னால இந்த தோல்விய பாரபட்சமில்லாம பாக்கமுடியுது ஏத்துக்க முடியுது..

    எந்த ஒரு வீரரும் பணத்திமிர் காரணமாக தோற்பதில்லை... எதிரணியினரின் திறமையான விளையாட்டும், க்ரவுண்ட் கண்டிஷனும் கூட ஒரு அணி தோற்பதற்கான காரணங்களாக அமைந்துவிடுவதுண்டு..

    இதே ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் நடந்த ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் நாடு திரும்பியபோது அவர்களை யாரும் இப்படியெல்லாம் ஏசி பேசவில்லை. இந்தியதுணைக் கண்ட சூழலில் வெற்றிபெறுவது கடினம் என்று ஏற்றுக்கொண்டார்கள்..

    வலுவான மேற்கிந்திய அணி 1983ல் நாவிஸ் எனப்படும் இந்திய அணியிடம் தோற்றபோதும் அவர்களை யாரும் தூற்றவில்லை...

    இது நம் இந்தியர்களுக்கே உரிய கண்ணோட்டம்..

    சரி.. இதுவல்ல இந்த பதிவின் நோக்கம்.. ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்..

    உங்களுடைய கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி ஜோ..

    பதிலளிநீக்கு
  20. ஜோசப் சார்,
    தோல்வி ஒன்றும் கேவலமானதல்ல .முழு முயற்சியும் மேற்கொண்டோம் ,ஆனாலும் கைநழுவி விட்டது என்றால் அது வேறு .ஆனால் இவர்கள் விளையாடியதைப் பார்த்தால் "சரி! இப்போ என்ன கெட்டுபோச்சு" -ங்குற மாதிரி தான் விளையாடுனாங்க .பீல்டிங் செய்யும் லட்சணத்தை வைத்தே ஒரு அணியின் முயற்சியை ,சிரத்தையை அறிந்து கொள்ளலாம் .இப்ப இந்த பந்தை விழுந்து தடுத்தவுடனே எனக்கு ஒரு ரன்னோ விக்கெட்டுமா கிடைக்க போகுது ,விழுந்து துணியில் அழுக்கு படுவானேன் என்ற ரீதியிலே இவர்கள் செயல்பாடு இருந்தது .சுயநலம் ,அணி மனப்பான்மையே இல்லை .இத்தனை கோடி மக்களின் எதிர்பார்ப்புக்காகவாவது கொஞ்சம் சிரத்தை எடுப்போம் என்ற சிந்தனை இல்லை ..என்னத்த சொல்ல..

    உங்கள் கிரிக்கெட் பற்றை நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் ஜோசப் சார்!

    பதிலளிநீக்கு
  21. கை நோக அருமையான விசயம் (தி.பா I&II) எழுதினா மொத்தமாவே 10 பின்னூட்டம்கூட வர்ரதில்லை , ஆனா கொஞ்சம் சாக்கடையில் கை வச்சா பின்னூட்டமா குவியுதே ?

    வாங்க வாங்க தினமும் இந்த மாதிரி பிரச்னைகளை பற்றி பேசலாம்ன்னு இவரையும் ஏங்க இழுத்து போடறீங்க ?

    பதிலளிநீக்கு
  22. வாங்க நாடோடி,

    உங்க கருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  23. உங்கள் கிரிக்கெட் பற்றை நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் ஜோசப் சார்!
    //

    ச்சேச்சே.. அப்படியெல்லாம் அவ்வளவு ஈசியா புண்ணாயிராது நம்ம மனசு...

    பதிலளிநீக்கு
  24. வாங்க மூர்த்தி,

    கை நோக அருமையான விசயம் (தி.பா I&II) எழுதினா மொத்தமாவே 10 பின்னூட்டம்கூட வர்ரதில்லை , ஆனா கொஞ்சம் சாக்கடையில் கை வச்சா பின்னூட்டமா குவியுதே ?

    வாங்க வாங்க தினமும் இந்த மாதிரி பிரச்னைகளை பற்றி பேசலாம்ன்னு இவரையும் ஏங்க இழுத்து போடறீங்க ? //

    பரவாயில்லீங்க..

    எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கத்தானே செய்யும்..

    பதிலளிநீக்கு
  25. வாங்க குலக்கோடன்,

    ராமதாஸ் சிந்திப்பதில் தவறில்லை.
    அதை அவர் செயற்படுத்தும் முறையில் சில கருத்து வேறுபாடு இருக்கலாம். //

    அதுமட்டுமேதான் இந்த பதிவின் நோக்கம்..

    மற்றபடி இந்திய அணியின் தோல்வியைக் குறித்து வாதாடுவதல்ல என் நோக்கம்..

    பதிலளிநீக்கு
  26. உண்மைதான் ஜோசப் சார். நாம் பதிவை விட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பது நல்லதே. கண்டிப்பாகச் செய்ய வேண்டும். தமிழிசை நிகழ்ச்சிகள் நடத்தியது போல அதற்கும் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது செய்திருப்பது அல்ல. இதனால் பரபரப்பு உண்டாகுமே தவிர பாரம்பரிய விளையாட்டுகள் பிழைக்காது.

    பதிலளிநீக்கு
  27. "இந்தியான்னு பெயர் பொறித்திருக்கும் சட்டையை அணிவித்து சிலரை கழுதையில் ஏற்றி வருவதும் அவர்களை சிலம்பாட்டக்காரர்கள் கோலால் அடிப்பதுபோல் காட்டுவதும்...

    இதெல்லாம் ஒரு தேசிய தலைவர் செய்யற காரியமாங்க.."

    ஜோசப் சார்...எப்பல இருந்து நீங்க அவர தேசிய தலைவர்
    ஆக்கினீங்க???? இருந்தாலும் உங்க குசும்புக்கு அளவே இல்ல
    சார்....

    பதிலளிநீக்கு
  28. "அந்தக் கட்சியின் கொள்கைகள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகையால் அதில் எவ்வளவு நல்லது கெட்டது என்று விவாதிக்க என்னால் முடியாது."

    ராகவன் சார் என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க!
    அப்படி எந்த கருமாந்திரமும் இவங்களுக்கு மட்டும்
    இல்லை இப்ப இருக்குற எந்த கச்சிக்கும் கிடையாது.
    ஒவொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கொள்கை

    எனக்கு தெரிந்து இப்ப இருக்கும் ஒரே ஒரு கொள்கை
    செல்ல மகன் அமைச்சராக இருந்து, நாடாளுமன்றத்தில்
    தப்பு தப்பாக பேசி தமிழகத்தின் மாணத்தை கப்பல்
    ஏற்ற வேண்டும்...அதான்

    பதிலளிநீக்கு
  29. வாங்க குசும்பன்,

    ஜோசப் சார்...எப்பல இருந்து நீங்க அவர தேசிய தலைவர்
    ஆக்கினீங்க???? இருந்தாலும் உங்க குசும்புக்கு அளவே இல்ல
    சார்....
    //

    அதான? குசும்பன்னு பேர் வச்சிருக்கறவங்கதான் குசும்பு பண்ணணும்... :))

    பதிலளிநீக்கு
  30. /"தரமிறங்குகிறதா பா.ம.க?" /

    ஓ.. அப்பனா இதுக்கு முன்னாடி தரமா இருந்தாங்களா? பரவாயில்லையே ..!

    /கரு.மூர்த்தி said...
    கை நோக அருமையான விசயம் (தி.பா I&II) எழுதினா மொத்தமாவே 10 பின்னூட்டம்கூட வர்ரதில்லை , ?
    /
    அப்படி இல்லைங்க, கரு.மூர்த்தி!
    தி.பா I&II -லாம் என்னைப் போல உள்ள 'சோம்பேறி' ஒரு நாள்வந்து தி.பா-தொடரை 5 இல்லனா 10 பதிவு படிச்சிடுவோம். பின்னூட்டம் போடுறதுலாதான் சோம்பேறி...

    /ஆனா கொஞ்சம் சாக்கடையில் கை வச்சா பின்னூட்டமா குவியுதே /
    என்னங்க பண்றது... அந்த 'சாக்கடையில'தான நம்ம நாட்டோட எதிர்காலத்தை தீர்மானிக்கிறாங்க! அதனாலதான் "நம்ம எண்ணங்களையும்" பதிவு செய்யலாமே-னு ......

    பதிலளிநீக்கு
  31. ஜோசப் சார்,

    கிரிக்கெட் மட்டை பந்து மோகத்தில் நம் குழந்தைகள் பாழாகி வருகிறார்கள்.

    இதை நம் மருத்துவர் ஐயா மனம் வெந்து தான் ஒரு போராட்டம் நடத்துகிறார் என்று தோன்றுகிறது.

    வோட்டுக்காக நிச்சயமாக இதை செய்யவில்லை. ஏனென்றால், கிரிக்கெட் போதையில் இருக்கும் நம் மக்களுக்கு பிடிக்காத ஒன்றையல்லவா அவர் சொல்கிறார்..

    கிரிக்கெட் என்னவோ ஒரு பைசா பெறாத விஷயம் என்று நீங்கள் சொல்லியிருப்பது சிறிதும் சரியல்ல. இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளை விழுங்கும் அசுரனாக அது உருவெடுத்திருக்கிறது. அதை ஒரு சமூக விரோதியாக (சினிமாவை அடுத்து) உருவகிப்பது மிகவும் நியாயமே என்றுதான் தோன்றுகிறுது.

    மருத்துவர் ஐயாவின் இந்த போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.

    நான் என் மக்கள் டிவி பதிவில் சொன்னதுபோல அவர் ஒரு நல்ல சமூக அக்கறை கொண்டவர். சாதிப்பற்று சில சமயங்களில் மேலோங்குவது வேறொரு விஷயம். இங்கு தொடர்பு படுத்த வேண்டாம்..

    லக்கியின் கருத்தையும் நான் இங்கு ஆமோதிக்கிறேன்.

    நன்றி

    பிகு. நான் ஒரு தீவீர கிரிக்கெட் பக்தன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  32. தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்ட தென்றல் மற்றும் ஜயராமன் அவர்களுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  33. Enna saarval,

    Seriousaah silar politics pannumbodhu comedy scenes vendamah? Cinemala kuda irukey... Andha madhiri thaan idhuvum...

    Cheers
    Aanipidunganum

    பதிலளிநீக்கு
  34. வாங்க ஆணி,

    Seriousaah silar politics pannumbodhu comedy scenes vendamah? Cinemala kuda irukey... Andha madhiri thaan idhuvum...//

    அப்ப சிரிச்சிட்டு விட்டுறலாம்னு சொல்றீங்க..

    ஹா..ஹா..ஹா.. விட்டுட்டேன்..

    பதிலளிநீக்கு