28 February 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 31

நேற்றைய பதிவில் மூன்று வகைப்பட்ட வாடிக்கையாளர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

4. Indisciplined Borrowers: இவர்களில் சிலர் எத்தர்கள். பலர் ஒழுங்கீனமானவர்கள். இவர்கள் வணிகம் செய்வதிலும் எவ்வித ஒழுங்கும் இருக்காது. வசதிக்கு மீறிய வணிகத்தில் ஈடுபடுவது, தேவைக்கு மீறிய வரவு செலவு செய்வது, லாபம் வருகிறதோ இல்லையோ வரவு செலவை (turnover) கூட்டுவதிலேயே குறியாயிருப்பது என்பதுபோன்ற நோக்கம் உடையவர்கள். தங்களுடைய இத்தகைய வணிக நோக்கத்திற்காக தேவைக்கு மீறிய கடனை வங்கிகளிலிருந்து மட்டுமல்லாமல் வெளியிலும் வாங்கிவிட்டு அவற்றைத் திருப்பிச் செலுத்த இயலாமல் எல்லாவற்றையும் வாழ்க்கையையும் சேர்த்து தொலைத்துவிட்டு நிற்பவர்கள்.

5. Honest Borrowers: நேர்மையானவர்கள். தங்களுடைய வணிகத்திலும் சட்டத்திற்கு விரோதமாகவோ அல்லது தங்களுடைய மனசாட்சிக்கு விரோதமாகவோ எதையும் செய்யாதவர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களில் சிலர் நடைமுறை நிதர்சனத்தை உணராதவர்கள். வங்கிகளை அணுகுவதிலும் இவர்களுடைய போக்கில் விசித்திரம் இருக்கும். தங்களுக்கு தேவையான கடன் தொகையை வழங்குவது வங்கிகளுக்கு கடமை என்று நினைத்திருப்பார்கள். 'Since I am honest I expect you to be honest. I've a genuine business. I've all the papers that you would expect from a businessman. You are supposed to grant me the loan I want. Sanction it without any conditions.' என்பதுபோலிருக்கும் இவர்களுடைய அணுகுமுறை. அவர்கள் அணுகும் வங்கியின் நியதிகளைவிட இந்திய ரிசர்வ் வங்கியின் நியதிகள் இவர்களுக்கு அத்துப்படி. நாம் எந்த விவரத்தைஅல்லது ஆவணத்தை கேட்டாலும், 'As per RBI guidelines you are not supposed to demand that.' என்பார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் கோரும் கடனை அதே அளவிலோ அல்லது அவர்கள் விரும்பிய ஷரத்துகளுக்குட்பட்டோ கொடுக்க இயலாமற் போகலாம். 'If you don't sanction the loan I need or if you stipulate conditions that I can't comply with, I'll complain to RBI' என்பார்கள். சில அனுபவமில்லாத மேலாளர்கள் இவர்களுடைய அதிகார தொனியைக் கண்டு அஞ்சி தங்கள் வங்கி நியதிகளையும் மீறி கடன் வழங்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டு பிறகு திண்டாடுவார்கள். நானும் ஒரு காலத்தில் அப்படித்தான். ஆனால் நாளடைவில் '
Sorry Sir.. If that's you want please go ahead and complain. I can't accede to your request' என்று பவ்யத்துடன் மறுத்துவிடுவேன். உடனே இவர்களில் பலரும் சரண்டராகிவிடுவார்கள். சரி நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் கடன் வழங்கினார்களே என்ற நன்றியுணர்வு இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. கடன் பெறும் நேரத்தில் 'Don't expect 'anything' from me.' என்று மறைமுகமாக எச்சரிப்பார்கள். ஆனால் தங்களுக்கு தேவையான எல்லா சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வட்டி விகிதத்தில் சலுகை, நீண்டகால தவணைகள், திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் பீனல் வட்டியில்லாத கால நீட்டிப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கேட்டால் 'That's what RBI guideline to Banks says.. When borrowers are in financial strain banks should not insist on loan repayment.' அத்துடன் வழங்கப்பட்ட தொகைக்கு மேல் தேவைப்படும்போதெல்லாம் மேலாளர் முகம் கோணாமல் வழங்கிவிட வேண்டும். 'அப்போதும் 'RBI has specific guidelines for additional financial requirements, I am entitled to exceed my sanctioned limit at least up to 10% of my limit.' என்று வாதிடுவார்கள். இத்தகைய கூடுதல் தேவையை நியாயப்படுத்த ஏதாவது ஆவணங்களையோ, அல்லது விவரங்களையோ கோரினால் அதற்கும் மசிய மாட்டார்கள். 'You look at my turnover in the account and sanction the additional funds.' என பதில் வரும். இவர்களை கையாள்வதற்கே மேலாளர்களுக்கு போறும் போறும் என ஆகிவிடும். யாராவது - அதாவது என்னைப் போன்ற பிடிவாதமுள்ள மேலாளர்கள் - மறுத்தால் அடுத்த நொடியே ரிசர்வ் வங்கிக்கோ அல்லது மேலதிகாரிகளுக்கோ இன்னார் என்னிடமிருந்து கையூட்டு கோரினார் என்ற புகார் பறக்கும். அதில் உண்மையில்லை என்பதை நிருபிப்பது சம்பந்தப்பட்ட மேலாளரின் பொறுப்பு. அதாவது நான் நேர்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு எனக்கு! அவருடைய புகார் உண்மையானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கில்லையாம். எப்படியிருக்கிறது நியாயம்! அவர் ஏற்கனவே நேர்மையானவர் என்ற பட்டம் உள்ளதல்லவா? அதான் காரணம். இருபது, முப்பது வருடங்கள் உண்மையுடன் பணியாற்றிய மேலாளரை நம்பாத வங்கி நிர்வாகம் இத்தகையோரது புகாருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் வேதனை.

இறுதியாக..

6. Dishonest Borrowers: இவர்கள்தான் எத்தர்கள். வணிகம் துவங்குவதிலும் எவ்வித அடிப்படைக் கொள்கைகளும் இல்லாதவர்கள். வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட எண்ணம் உடைய இவர்கள்தான் இன்று வங்கித்துறையிலிருந்து வழங்கப்பெறும் கடன் தொகையில் ஒரு பெருமளவு விகிதத்தை வளைத்துப் போடிருப்பவர்கள். வணிகத்தைத் துவக்க எப்படி எவ்வளவு வேண்டுமானாலும் 'கொடுக்க' தயாராயிருப்பார்களோ அதே அளவு தொகையை வங்கி மேலாளர்களுக்கு மட்டுமல்ல அவருக்கு மேலுள்ள சகல உயர் அதிகாரிகளுக்கும் 'கொடுத்து' தங்களுக்கு தேவையான கடனை பெற்றுவிடுவார்கள். சரி, அதை சரிவர அதாவது எந்த நோக்கத்திற்காக கடனைப் பெற்றார்களோ அதற்காக, உபயோகிப்பார்களா என்றால் அதுவும் இருக்காது. தேவைக்கு மீறிய அளவு கடனைப் பெறுவது, உபரி கடந்தொகையை தங்களுடைய வணிகத்திற்கு வெளியே அதாவது சம்பந்தமில்லாத சில சமயங்களில் சட்டத்திற்குப் புறம்பான துறைகளில் முதலீடு செய்து பன்மடங்கு லாபம் ஈட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பர். வாங்கிய கடனை பயன்படுத்தி அதிலிருந்து ஈட்டிய லாபத்தைக் கொண்டு வங்கி கடனை திருப்பிச் செலுத்துவார்களா என்றால் அதுவுமிருக்காது. வாங்கிய கடனை எப்படியெல்லாம் திருப்பிச் செலுத்தாமல் இருக்க முடியுமோ அத்தனை வழிகளும் அவர்களுக்கு அத்துப்படி.

சரி.. இனி இத்தகையோரை தங்களுடைய அன்றாட அலுவலில் சந்திக்கும் மேலாளர்களுள் எப்படிப்பட்டவர்கள் அடங்குவர் என்பதை சொல்கிறேன்..

1. Disciplined Managers: இவருக்கு முதலில் தான் யார் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். தன்னுடைய அலுவல் என்ன (Role), தன்னுடைய பொறுப்பு (Responsibility)என்ன, அதிகாரம் (Powers) என்ன, தன்னுடைய நோக்கம் (Aim) என்ன, என்பதுபோன்றவைகளை நன்றாகவே அறிந்திருப்பார். அத்துடன் தன்னுடைய எல்லை (Limitations) என்ன என்பதும் தெரிந்திருக்கும். ஆகவே இவற்றிற்குள் மட்டுமே இயங்குவதில் குறியாயிருப்பார். இத்தகைய மேலாளர்கள் திறமையானவர்கள் (Effificient) என்ற வகைக்குள் இருந்தாலும் அவர்களுடைய மேலாளர்களால் Performers என்று மட்டுமே கணிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுள் பெரும்பாலோனோர் outstanding performers என்ற மேலதிகாரியின் கணிப்பில் இருப்பதில்லை. அதாவது ஒருபோதும் star performer என கணிக்கப்படமாட்டார்கள். இவர்கள் வங்கியின் நியதிகளுக்குட்பட்டே வணிகம் செய்வார்கள். ஆனால் இவர்களுடைய நோக்கத்திற்கேற்ப வாடிக்கையாளர்கள் அமைவதும் சிரமம் என்பதால் இவர்களால் தங்களுடைய கிளை வணிகத்தை ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு விரிவுபடுத்த இயலாமற்போய்விடும். உதாரணத்திற்கு வங்கிகளில் வைப்பு நிதி கணக்குகளை (Fixed Deposits) துவக்குவதற்கும் சில விதிமுறைகள் உண்டு. இப்போது, வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருட வட்டித்தொகை ரூ.5000/-க்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து TDS பிடிக்கப்பட வேண்டும். அதாவது அதிகபட்ச வட்டி விகிதம் 9% ஆக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி செலுத்த விருப்பமில்லாத ஒருவர் தன்னுடைய பெயரில் ரூ.55000/-க்கும் கூடுதலாக வைப்பு நிதி கணக்கு துவங்க முடியாது. ஆகவே ஒருவரே தனக்குக் கீழ் பணிபுரிபவர்களில் பெயரிலோ அல்லது இல்லாத ஒருவரின் பெயரிலோ (fictitious) வைப்பு நிதி கணக்கு துவங்க விரும்பினால் இத்தகைய disciplined மேலாளர்கள் சம்மதிக்க மாட்டார்கள். 'I am sorry Sir.. I can't allow that.' என்று மறுத்துவிடுவார்கள். ஆனால் இன்றும் பல வங்கிகளில் இது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. சரி. இதற்கே மறுப்பு தெரிவிக்கும் மேலாளர்கள் வங்கியிலிருந்து கடன் வழங்குவதில் வங்கியின் நியதிகளை மீறுவார்களா? வங்கி விதிக்கும் நியதிகளுக்குட்பட்டு கடன் பெற நினைக்கும் வாடிக்கையாளர் இவர் மேலாளராக இருக்கும் வங்கி கிளையிலிருந்து கடன் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. அவருக்கு எங்கு சென்றாலும் கடன் கிடைக்குமே. ஆகவே இத்தகைய மேலாளர் இருக்கும் கிளையில் வணிகம் பெருமளவில் விரிவாகாது. தங்களுக்கு மேலதிகாரிகள் நிர்ணயிக்கும் எல்லைகளை (Targets) எட்டுவதிலேயே திருப்தியடைந்துவிடும் இவர்கள் Satisfactory Performers ஆகவே இருப்பர்கள். ஒருபோதும் Outstanding Performers ஆக மின்னுவதில்லை. ஆனால் தங்களுடைய நேர்மையான, திறமையான, ஒழுங்கான அலுவலுக்காக அங்கீகாரம் பெற்று பெரும் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டு பணியிலிருந்து ஓய்வு பெறுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகும் வேறொரு பணியில் சேர்ந்து ஜீவனம் நடத்தவேண்டிய நிலையிலேயே இருப்பார்கள்.

2. Indisciplined Managers: இவர் முன்னவருக்கு நேர் எதிர். இவருக்கு தன்னையும் தெரியாது தன்னுடைய வாடிக்கையாளரையும் தெரியாது. சிலருக்கு தன்னுடைய மேலதிகாரிகளையும் தெரியாது. என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது தெரியாமலேயே தங்களையும் குழப்பிக்கொண்டு தங்களை சுற்றியுள்ளவரையும் குழுப்பி விடுவார்கள். இத்தகையோருடைய அலுவலக மேசையை ஒருமுறை பார்த்தாலே போறும். நான் ஒரு கிளைக்கு பொறுப்பேற்க சென்றபோது அவருடைய மேசையின் மேற்புறத்தை பார்க்க முடியாத அளவு கோப்புகள் நிறைந்து வழிந்தன. என்ன சார் கையெழுத்து போடறதுக்குக் கூட இடத்த காணமே என்றேன். அவர் படு சீரியசாக 'நீங்க இந்த மாதிரி பிராஞ்சிலல்லாம் வேலை செஞ்சிருக்கலையே டிபிஆர். அதான் ஒங்களுக்கு புரிய மாட்டேங்குது. இங்கல்லாம் ஒரே நேரத்துல பல வேலைங்கள பாக்க வேண்டியிருக்கும்.' என்றார். அதெப்படிதான் ஒரே நேரத்துல ரெண்டு ஃபைல படிப்பாரோ.. இத்தன வருசமாகியும் என்னால அது முடியறதில்லை. சேமிப்பு கணக்குகளை துவக்குவதிலும் சரி கடன் வழங்குவதிலும் சரி எவ்வித நியதிகளையும் கடைபிடிக்கமாட்டார்கள். கேட்டால் 'அதையெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா பிசினஸ் பண்ண முடியாது சார்.' என்பார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களுடைய கிளைகளை ஆய்வு செய்ய வரும் ஆய்வாளர்கள் என்ன எழுதி வைத்துவிட்டுச் சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படவே மாட்டார்கள். இவர்களுள் பெரும்பாலோர் தங்களை மேலார்களாகப் பார்ப்பதில்லை. முதலாளிகளாகவே கற்பித்துக்கொண்டுவிடுவார்கள். ஆனால் ஒன்று. இவர்கள்தான் star performersஆக இருப்பார்கள். இவர்கள் பதவியிலிருக்கும் காலத்தில் கிளையின் வர்த்தகம் பன்மடங்காகிவிடும். தடைகள் இல்லாத காட்டாற்று வெள்ளம் போல வணிகத்தின் அளவும் அதன் பயனாக லாபத்தின் அளவும் கணிசமாக பெருகிவிடும். அதை மட்டுமே பார்வையிடும் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவதும் வழக்கம். விருதுகளும் இவர்களுக்கு அத்துப்படி. மிக விரைவில் எட்ட முடியாத அளவுக்கு உயர்வார்கள். ஆனால் சரியான அடித்தளம் இல்லாத காரணத்தில் உயர்ந்த வேகத்திலேயே விழவும் செய்வார்கள். அடியும் பலமாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

3. Dishonest and corrupt Managers:

இவர்கள் பயங்கரமானவர்கள். இன்று வங்கித்துறையில் செயலிழந்துப்போன கடன் கணக்குகளில் முடங்கிக் கிடக்கும் ஒரு லட்சம் கோடிக்கு மேலுள்ள தொகையில் பெரும்பாலானவை இத்தகையோர் வழங்கிய கடன்களாகத்தான் இருக்கும். ஒரு dishonest borrowerம் ஒரு dishonest managerம் சேர்ந்துவிட்டால் பொதுமக்களின் சேமிப்பு அதோகதிதான். இவர்களுடைய நோக்கம் முழுவதும் எத்தனை விரைவில் எத்தனை கொள்ளையடிக்கலாம் என்பதுதான். அத்துடன் சிக்கிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி என்பதையும் கரைத்துக் குடித்திருப்பார்கள். தங்களுக்கு 'கிடைப்பதில்' கொடுக்க வேண்டியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதிலும் சமர்த்தராயிருப்பர். 'நமக்கு கிடைக்கறதுல ஒரு பர்செண்ட் ஷேர் யாருக்கு குடுக்கணுமோ அங்க குடுத்திரனுங்க.. அப்பத்தான் நாம மாட்டிக்கறப்போ தப்பிக்க முடியும்.' இதுதான் இவர்களுடைய தாரக மந்திரம். இவரிடம் வரும் நேர்மையான கடந்தாரர்களையும் இவர்களுடைய வழிக்கு கொண்டு வருவதிலும் சூரர்களாயிருப்பர். இவர்களுடைய பதவிகாலத்தில் இவர்கள் அளிக்கும் சலுகைகளையெல்லாம் அனுபவித்து மகிழ்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இவரையடுத்து இவரைப் போன்றவரே மேலாளராக வந்தால் பிழைத்தார்கள்.. மாறாக ஒரு disciplined மேலாளர் வந்தால் அவ்வளவுதான்..

சரி இறுதியாக ஒருவரைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்..

4. Cunning Managers

இத்தகையோர் உண்மையில் மூன்றாம் வகை ஆட்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் வெளியில் பார்த்தால் 'இவரா? இருக்காது சார்.' என்ற தோற்றம் இருக்கும். இவர்கள் ஒரு Disciplined Manageருடைய எல்லா தகுதி மற்றும் திறமையைக் கொண்டிருப்பர். எல்லா நியதிகளையும் கரைத்துக் குடித்திருப்பர். அத்துடன் தன்னுடைய மேலதிகாரிகள், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள், தன்னுடைய வாடிக்கையாளர்கள் என அனைவரையும் வளைத்துப் போட்டு தன்னைப் பற்றி ஒரு நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடுவதிலும் சமர்த்தர்களாயிருப்பர். கையூட்டு பெறுவதிலும் ஒரு கோணம் இருக்கும். ஒரு Dishonest மேலாளரைப் போன்று நேரடியாக கேட்க மாட்டார்கள். ஆனால் குறிப்பால் உணர்த்திவிடுவார்கள். அதாவது கொடுத்தால் வாங்கிக்கொள்கிறேன் என்று. வாடிக்கையாளர் ஏதோ நிர்பந்தித்து அளிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுவார்கள். கிளையின் செயல்பாடுகளில் எவரையும் தலையிட அனுமதிக்கமாட்டார்கள். எல்லாம் நம்மால்தான் முடியும் என்ற போக்கு எல்லாவற்றிலும் தெரியும். விடுப்பே எடுக்காமல் வருடத்தில் 365 நாளும் பணிக்கு வருவார்கள். இவர்களுள் பெரும்பாலோனோர் தங்களுடைய மேசை இழுவைகளை மட்டுமல்லாமல் அறைக் கதவையும் பூட்டி சாவியை தங்களுடன் கொண்டுசென்றுவிடுவார்கள். இவர்கள் மாற்றலாகிச் சென்ற பிறகும் கூட இவருக்கு பின்னால் வரும் மேலாளர்களால் இவர்கள் செய்துவைத்திருந்த குளறுபடிகளை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாத அளவுக்கு இவருடைய வேலை அத்தனை பிரமாதமாக இருக்கும். இவர்தான் இந்த குளறுபடிக்குக் காரணம் என்பதை நிரூபிக்க இவரை தொடர்ந்து வரும் மேலாளர் படாதபாடு படவேண்டியிருக்கும். பார்த்தா பசு பாஞ்சா புலி என்பார்களே அந்த ரகம் என்றாலும் மிகையல்ல..

இன்னைக்கி கொஞ்சம் ஜாஸ்தியாவே எழுதிட்டேன்னு நினைக்கேன்.. இதுல என்னோட முந்தைய மேலாளர் எந்த ரகத்தைச் சார்ந்தவர்னு ஏதாச்சும் தெரியுதா.. திங்கட் கிழமை பாக்கலாம்..

தொடரும்

10 comments:

dondu(#11168674346665545885) said...

//இதுல என்னோட முந்தைய மேலாளர் எந்த ரகத்தைச் சார்ந்தவர்னு ஏதாச்சும் தெரியுதா.. திங்கட் கிழமை பாக்கலாம்..//

Cunning Manager. ஓக்கேவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

இலவசக்கொத்தனார் said...

நல்ல வகைப்படுத்தல்.

மேலாளர்களில் இன்னும் ஒரு வகை இருக்கே. அதாங்க பயந்தாங்கொள்ளி. எதை எடுத்தாலும் பயம் அதனால நியதிகளுக்குட்பட்டு எடுக்கக்கூடிய முடிவுகளை எடுக்காமல் வாடிக்கையாளர், தன் கீழ் வேலை செய்பவர் என அனைவரையும் அழவிடுவாரே. இவர் முடிவெடுக்க முடியததால் டார்கெட் கூட எட்ட முடியாமல் அவஸ்தை படுவார். கடைசியில் வாடிக்கையாளர் தொடர்பில்லா துறை ஒன்றிக்கு மாற்றப்பட்டு முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை மேலாளராகவே ஓய்வு பெறுவார்.

நல்லாச் சொல்லி இருக்கீங்க சார். என் பழைய மேனேஜர்கள் எல்லாரையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க. எல்லா வகை ஆளுங்க கிட்டயும் மாட்டி இருக்கேன்!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க ராகவன் சார்,

Cunning Manager. ஓக்கேவா?//

நீங்க சொன்னா தப்பாருக்குமா:)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க கொத்தனார்,

மேலாளர்களில் இன்னும் ஒரு வகை இருக்கே. அதாங்க பயந்தாங்கொள்ளி. //

கரெக்ட்.. ஆனா இவங்க நான் சொன்ன டைப்ல டிஸ்ஹானஸ்ட் மேனேஜர தவிர எல்லா டைப்லயும் இருப்பாங்க.. நல்லா விவரம் தெரிஞ்ச மேனேஜர்கள்லயும் இந்த மாதிரி ஆளுங்கள பாத்திருக்கேன்.. நீங்க சொன்னா மாதிரி அவஸ்தையும் பட்டிருக்கேன்..

நீங்க நல்ல 'அனுபவசாலி'தான் போலருக்கு:)

tbr.joseph said...

rதி.பா 31 பின்னூட்டம் இட்டேன்....சொதப்பிடுச்சி.....எனவே
மெயிலிட்டேன்

//4. Indisciplined Borrowers: இவர்களில் சிலர் எத்தர்கள். பலர் ஒழுங்கீனமற்றவர்கள்...//

அப்டீனா ஒழுங்கானவர்கள்னு அர்த்தமா?
double negatives make an affirmative னு படிச்சதா ஞாபகம்

ரிடையர்ட் கேஸுக்கு வேறவேலை இல்லே என்பேள்....
வுட்றுங்கோ ஸ்வாமி

சிவஞானம்ஜி

tbr.joseph said...

வாங்க ஜி!


அப்டீனா ஒழுங்கானவர்கள்னு அர்த்தமா?
double negatives make an affirmative னு படிச்சதா ஞாபகம்//

மாத்திட்டேன்..:)

balarajangeetha said...

வேலை உயர்விற்கும் (promotion) வங்கிக் கிளை மேலாளராகப் பணி புரிவதற்கும் தொடர்பு உள்ளதா ? சில நேரங்களில் கிளை மேலாளராகப் பணி புரிவது வேலை உயர்விற்குத் தடையாக உள்ளதே. (எதிர்பாராத காரணங்களினால் டெபாசிட் இலக்கு எட்டுவதில் மற்றும் கடன் வசூல் செய்வதில் தடை ஏற்படுவதும் உண்டே)

வங்கிப் பணியில் "உங்களுக்கு யாரைத்தெரியும் ? உங்களை யாருக்குத் தெரியும் ? " என்பது ஒரு ஃபேமஸான வாசகம். :-)

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

வாங்க பாலா,

வேலை உயர்விற்கும் (promotion) வங்கிக் கிளை மேலாளராகப் பணி புரிவதற்கும் தொடர்பு உள்ளதா ? சில நேரங்களில் கிளை மேலாளராகப் பணி புரிவது வேலை உயர்விற்குத் தடையாக உள்ளதே. (எதிர்பாராத காரணங்களினால் டெபாசிட் இலக்கு எட்டுவதில் மற்றும் கடன் வசூல் செய்வதில் தடை ஏற்படுவதும் உண்டே)//

உண்மைதான். உண்மையில் உழைப்பது மேலாளர்கள்தான். ஆனால் பதவி உயர்வு கிடைப்பது அட்மினிஸ்ட்ரேஷன் சைடில் இருப்பவர்களுக்குத்தான்.

வங்கிப் பணியில் "உங்களுக்கு யாரைத்தெரியும் ? உங்களை யாருக்குத் தெரியும் ? " என்பது ஒரு ஃபேமஸான வாசகம்.//

இதுவும் உண்மைதான். ஆனால் இது வங்கித்துறையில் மட்டுமல்லாமல் எல்லாத்துறைகளுக்கும் பொதுதானே.
வேலை செய்வதற்கு ஒருவர் பரிசுக்கு ஒருவர் என்பதுதானே உலக நியதி.

Vasantham said...

இரண்டு மாதம் முன்பு, "திரும்பிப் பார்க்கிறேன் I" படித்தேன்.
படித்தேன் என்பதைவிட, என்னுடைய ஒரு வார (அலுவலக) வேலை செய்யாமல் படித்தேன்.

மிகவும் அருமையாக, நேர்த்தியாக, நேர்மையாக எழுதி இருந்தீர்கள். உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்.

என் தந்தை-யும் வங்கி-ல் தான் 35 வருடமாக (காசாளராக) இருக்கிறார் என்பதால் மிகவும் interesting-ஆ இருந்தது.

ஆனால், உங்கள் மற்ற பதிவு-களை எப்பொது படித்து முடிபன் என்று தெரியவில்லை.

வாழ்த்துகள்!!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

மிக்க நன்றி வசந்தன்.