17 November 2006

ஒங்க செல்ஃபோன பாருங்க!

இது சமீபத்தில் மலேசியாவில் நடந்த உண்மைச் சம்பவம்!


என்னுடைய மூத்த மகள் குடியிருக்கும் குடியிருப்பில் வசிக்கும் ஒருவரின் (மலாய் பெண்) கைப்பையை ஷாப்பிங் மால் ஒன்றில் தவற விட்டுவிட்டிருக்கிறார். அதில் அவருடைய, ATM Debit Card, Credit Card மற்றும் கைத்தொலைப்பேசி ஆகியவை இருந்துள்ளன.

ஷாப்பிங் முடித்துவிட்டு வெளியே வரும் நேரத்தில்தான் அதைக் கவனித்திருக்கிறார். உடனே தன்னுடைய கணவரை அழைத்து விவரத்தைக் கூறி 'காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்' என்றாராம்.

அதற்கு அவருடைய கணவர் ‘நீ சற்று முன்னர்தானே நம்முடைய வங்கி PIN எண்ணை SMS மூலம் கேட்டாய். நானும் உடனே SMS வழியாக அதை அனுப்பினேனே.’ என்றாராம்.

‘ஐய்யோ நா அனுப்பலீங்க.’ என்று மனைவி பதற கணவரும் மனைவியும் தங்களுடைய வங்கிக்கு விரைந்திருக்கின்றனர்.

அந்த பெண்மனியுடைய கைப்பையை எடுத்தவன் அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்த அனைத்தையும் எடுத்திருக்கிறான்.

எப்படி?

அம்மணியின் கைத்தொலைப்பேசியில் கணவருடைய கைத்தொலைப்பேசியின் எண் ‘கணவர்’ என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்ததால் கள்வனால் எளிதாக அவருக்கு SMS செய்து PIN எண்ணைக் கேட்டறிய முடிந்திருக்கிறது.

படிப்பினை:

நம்முடைய உறவினர்களுடைய செல்ஃபோன் எண்ணை கணவர், மனைவி, மகன், மகள் என்ற உறவு முறையில் கைத்தொலைப்பேசியில் சேமிக்கலாகாது!

நானும் என்னுடைய மகளிடமிருந்து கிடைத்த இந்த மயிலைப் படித்தவுடனே செய்த முதல் காரியம் என்னுடைய செல்ஃபோனில் சேமித்திருந்த எண்களுடைய உறவுமுறையை மாற்றியதுதான். அவரவர் பெயரிலேயே எண்களை சேமித்துவைப்பது உத்தமம்.

ஒங்க செல்ஃபோன்ல எப்படிங்க.. பாருங்க!!

***

8 comments:

துளசி கோபால் said...

இப்பத்தான் புதுசாப் போட்ட பதிவுலே 'செல்போனை' எடுத்துக்கிட்டீங்களான்னு
முடிச்சிருந்தேன்.

இங்கே வந்து பார்த்தால்........

இப்ப இப்படி ஒரு க்ரைமா?

tbr.joseph said...

வாங்க துளசி,

எங்க பேங்க் கஸ்டமர் ஒருத்தர் எங்க பேங்க் பெயரோட முதல் மூனு லெட்டரையும் போட்டு பின் நம்பர குறிச்சி வச்சிருக்கார். இதே மாதிரிதான் கார்டும் செல்ஃபோனும் அவரோட லஞ்ச் பேக்ல இருந்துருக்கு. பைய அடிச்சவன் படிச்சவன் போல. செல்ஃபோன்லருக்கற பின் நம்பர கரெக்டா யூகிச்சி பக்கத்துலருக்கற ஏடிஎம்ல போயி அதிகபட்ச அளவான ரூ.15000/- எடுத்துக்கிட்டு போய்ட்டான்.. அதுவும் தொடர்ந்து மூனு நாள்..

ஆனா நல்லவன் போலருக்கு. தன்னோட வேல முடிஞ்சதும் லஞ்ச் பேக்லருக்கற அட்றச பாத்துட்டு ஆஃபீஸ் வாசல்ல வச்சிட்டு போய்ட்டான். மனுசன் அப்பவும் ஏடிஎம்லருந்து போன பணத்த கண்டுபிடிக்கல.. சுமார் ரெண்டு வாரம் கழிச்சி ஏடிஎம்ல போய் பணம் எடுக்க போயிருந்தப்போதான் பணம் இல்லைங்கற விஷயமே தெரிஞ்சிருக்கு.

கார்ட் காணாம போனவுடனே பேங்க்ல சொல்லியிருந்தா பரவாயில்லை.. இப்ப போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்துக்கிட்டிருக்கார்..

இதெப்படியிருக்கு!

மணியன் said...

நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். உறவுமுறைகளை எடுத்துவிட்டீர்களென்றால் ஒரு விபத்து போண்ற சம்பவங்கள் போது உங்கள் உறவினர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது ? ICE என்று பதிவு செய்திருந்தாலும் இத்தகைய திருடனுக்கு அது நெருங்கிய உறவினர் என்று தெரியுமே!
வங்கிப் PINஐ க் கொடுக்கும்போது செல்லில் பேசியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

உறவுமுறைகளை எடுத்துவிட்டீர்களென்றால் ஒரு விபத்து போண்ற சம்பவங்கள் போது உங்கள் உறவினர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது ? //

எண்களை Home, hubby, wife, Darling, daughter/son என்ற பெயரில் பதியாமல் அவரவர் பெயரிலேயே பதியலாமே..

அதுபோலவே நம்முடைய டெபிட், க்ரெடிட் கார்ட் PIN எண்களையும் சிலர் தங்களுடைய மொபைலில் சேமித்து வைப்பதைப் பார்த்திருக்கிறேன். அதுவும் ஆபத்துதான்.

வங்கிப் PINஐ க் கொடுக்கும்போது செல்லில் பேசியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். //

வாஸ்தவந்தான்.

srishiv said...

வணக்கம் ஐயா
ரொம்ப நாளுக்கு அப்புறம் :), தினமும் உங்கள் வலைப்பூவை பார்த்து பார்த்து கண்கள் பூத்தது :(, மணியன் கூறியது ICE ( In Case of Emergency), ஆபத்து காலத்தில் உங்கள் உறவினர்களுக்கு அறிவிக்க என்பதே, அதற்கு என்ன செய்யலாம்? ஒரு உபாயம் தாங்களேன்???

tbr.joseph said...

வாங்க ஸ்ரீஷிவ்,

நம்ம வீட்டு லேண்ட் லைன் ஃபோனின் எண்களை ஹோம் என்ற பெயரில் பதிவு செய்து வைப்பதில் தவறில்லை.நான் குறிப்பிட்டிருந்ததுபோன்ற SMS அனுப்ப முடியாதல்லவா? நம்முடைய குடும்பத்தாரின் செல்ஃபோன் எண்களை மட்டுமே உறவுமுறைகளைக் குறிப்பிட்டு பதிய வேண்டாம் என்று கூறினேன்.

இன்னும் பத்து நாட்கள். மீண்டும் தி.பா தொடரைத் துவங்கலாம் என்று இருக்கிறேன்..

srishiv said...

மிக்க நன்றி ஐயா உபாயத்திற்கு
அப்படியே செய்கின்றேன் :), விரைவில் ஆரம்பிக்கவும்,
இவண்,
அகில உலக டி.பி.ஆர்.ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர்மன்ற பொதுச்செயலாளர்...:)
ஸ்ரீஷிவ்...:)

tbr.joseph said...

இவண்,
அகில உலக டி.பி.ஆர்.ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர்மன்ற பொதுச்செயலாளர்...:)
ஸ்ரீஷிவ்...:)//

இத போலி டோண்டு மாதிரி போலி டி.பி.ஆர்னு நினைக்கப் போறாங்க!