20 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 175

‘சார் நேத்து நீங்க வந்தப்போ ஒங்க தேவையை சரியா புரிஞ்சிக்காம ஒரு ரேட் சொல்லிட்டேன். எம் பையன் சாயந்திரம் வந்து என்னைய சத்தம் போட்டுட்டான். அதனால..’ என்று இழுத்தார்.

அவருடைய தயக்கத்தின் காரணத்தை புரிந்துக்கொண்ட நான் புன்னகையுடன், ‘சொல்லுங்க.. இப்ப என்ன ரேட்?’

அவர் கூறிய விலையை கேட்டதும் முந்தைய நாள் என்னுடைய மேஸ்திரியிடம் கூறிய கணக்கு என்னுடைய நினைவுக்கு வந்தது. மேஸ்திரி நான் கூறிய கணக்கை உடனே அமர்ந்து ‘கணக்கு’ செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

கடப்பா தட்டுகளுக்கு இன்று பட்டறை உரிமையாளர் கூறிய விலை மேஸ்திரியைக்கொண்டு கான்க்ரீட் தட்டுகளை செய்வதைவிட சுமார் ஐம்பது சதவிகிதம் கூடுதல் என்பது புரிந்தது.

இருந்தாலும் வீம்புக்கு இதையே வாங்கினால் என்ன என்று எனக்கு தோன்றினாலும் அதனால் நஷ்டமடையப் போவது நான்தானே என்றும் தோன்றியது.

‘சரிங்க.. அப்புறமா வந்து சொல்றேன்.’ என்று கிளம்பினேன்.

அவருக்கு என்ன தோன்றியதோ என் பிறகே வந்தார். ‘சார்.. என்ன கிளம்பிட்டீங்க? நான் சொல்றது இருக்கட்டும் சார். நீங்க ஒங்களுக்கு கட்டுபடியாகற ரேட்ட கேளுங்களேன்.’

நான் திரும்பி அவரை ஆழமாக பார்த்தேன். ‘ஏண்ணே.. நா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?’

அவருக்கு புரிந்திருக்கவேண்டும். தலையை குனிந்துக்கொண்டார்.

இனிமேலும் அவரை புண்படுத்த விரும்பாமல் அங்கிருந்து கிளம்பினேன்.

அலுவலகம் செல்லும் வழியெல்லாம் இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தவாறே சென்றேன்.

என்னுடைய மேஸ்திரியிடமோ அல்லது பொறியாளரிடமோ இதைப் பற்றி பேசுவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்பது எனக்கு புரிந்தது.

பட்டறைக்கு அவர் சென்றதை நான் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளக் கூடாது என்றும் ஏதோ நானே மனம் மாறி கடப்பா தட்டுகளுக்கு பதிலாக கான்க்ரீட் தட்டுகளை அவரைக் கொண்டே தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவருக்கு உணர்த்தவேண்டும் என்ற தீர்மானத்துடன் என்னுடைய அலுவலகத்தையடைந்து என்னுடைய அலுவல்களில் மூழ்கிப்போனேன்.

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் என்னுடைய மேஸ்திரி வரவில்லையென்பதால் அவருக்கு நான் பட்டறைக்குச் சென்று விசாரித்ததும் கடப்பா கற்கள் வேண்டாமென்று நான் முடிவெடுத்திருந்ததும் தெரிந்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். அடுத்த கட்ட வேலையை துவங்க இன்னும் ஒருவாரம் இருந்ததால் நானும் அவராகவே வரட்டும் என்று காத்திருந்தேன்.

மூன்று நாட்கள் கழித்து ஒரு நாள் மாலை மேஸ்திரி மட்டும் தனியாக வந்தார். வீட்டைச் சுற்றிலும் ஒருமுறை வலம் வந்தார். அப்போதுதான் அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்த நான் அவரைப் பார்த்து, ‘என்ன மேஸ்திரி பாக்கீங்க?’ என்றேன்.

‘ஒன்னுமில்ல சார். நாளைலருந்து ஸ்லாப் வேலைய துவக்கலாம்னு பாக்கேன். கடப்பா ஸ்லாப் வாங்கி வைக்கறேன்னு சொன்னீங்களே. அதான் வாங்கிட்டீங்களான்னு பாத்தேன். ஒன்னும் காணலையே சார்.. வாங்கலீங்களா?’

நான் பதிலேதும் கூறாமல் அவரையே சற்று நேரம் பார்த்தேன்.

‘என்ன சார்? வாங்கினீங்களா இல்லையா? வாங்கலன்னா மேக்கொண்டு என்ன செய்யறதா உத்தேசம்?’

நான் சற்று நேரம் யோசித்தேன். பிறகு அவரை வைத்தே கான்க்ரீட் தட்டுகளை செய்வதென தீர்மானித்திருந்ததை கூறினேன்.

அவரால் நம்பமுடியவில்லை. ‘என்ன சார்? என் வேலைய அன்னைக்கி கிண்டலடிச்சீங்க? இப்ப என்ன திடீர்னு?’

நான் அவரை கூர்ந்து பார்த்தேன். ‘இல்ல மேஸ்திரி.. நான் சொல்றபடியே நீங்க செஞ்சீங்கன்னா போறும்.. சைசும் சின்னதா நான் நெனச்சா மாதிரியே வரும். செலவையும் சுருக்கிரலாம்.’ என்றேன்.

அவருக்கு நான் கூறியது புரிந்ததோ இல்லையோ, ‘அப்ப நாளைக்கு கம்பி கட்டுறவங்களயும் வரச் சொல்லலாம் இல்ல?’ என்றார்.

‘வரச்சொல்லுங்க. மொத்தமா இன்னும் இருபது ஸ்லாபுங்க வேணும். வேணுங்கற கம்பி இங்கயே லோக்கலா வாங்கி வச்சிருக்கேன். ஆனா நாளைக்கு நீங்களும் சித்தாளுங்களும் வரவேணாம். நான் எல்லா ஸ்லாபுகளுக்கும் உண்டான கம்பிய கட்டி முடிச்சிட்டு அவங்ககிட்டவே சொல்லியனுப்பறேன். அப்புறம் வந்தாப்போறும்.’

நான் கூறியதில் அவருக்கு திருப்தியில்லை என்பது அவருடைய பார்வையிலிருந்தே புரிந்தது. என்றாலும் அவர் பதிலேதும் கூறாமல் சைக்கிளில் ஏறிச் சென்றார்.

அவர் மறையும்வரை காத்திருந்தாற்போல் என்னுடைய நண்பர் ராஜேந்திரன் அவருடைய வீட்டு வாசலிலிருந்து என்னை அழைத்தார்.

‘என்ன சார், மறுபடியும் ஏதாச்சும் பிரச்சினையா? கோச்சிக்கிட்டு போறா மாதிரி தெரியுது?’ என்றார் சிரித்தவாறு..

‘ஆமா சார். ஆனா டாக்ட்ஃபுல்லா ஹேண்டில் பண்ணிட்டேன்னு நினைக்கேன். பார்ப்போம்..’ என்று அதை மேலும் விவரிக்காமல் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் விடுப்பு எடுத்துக்கொண்டு வேலையாட்களுடன் அமர்ந்து எனக்கு தேவையான தட்டுகளுக்கு கம்பி கட்டி முடித்தேன். பிறகு அவர்களை அனுப்பிவிட்டு அடுத்த நாள் ராஜேந்திரன் ஏற்கனவே எனக்கு அறிமுகப்படுத்தியிருந்த கொத்தனாரையும் சித்தாளையும் வைத்து சமையலறை அலமாரிக்கு தேவையான தட்டுகளை என்னுடைய நேரடி பார்வையில் முக்கால் இஞ்ச் உயரத்துக்கும் கூடாமல் போட்டு முடித்தேன். கீழ் பாகமும் சீராக இருக்க வேண்டுமென்று ஏற்கனவே மேஸ்திரி தயார் செய்துவைத்திருந்த கான்க்ரீட் தட்டுகளின் மீது வைத்து போடச் சொன்னேன்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் தண்ணீர் விட்டு அதே கொத்தனாரை அழைத்துவந்து தட்டுகளை பெயர்த்தெடுத்தேன். நான் விரும்பியதுபோலவே கச்சிதமாக இருந்தது. கொத்தனாரை நன்றியுடன் பார்த்தேன்.

சாதாரணமாக ஒரு மேஸ்திரி வேலை செய்துக்கொண்டிருக்கும் இடத்தில் வேறொருவர் வந்து வேலையை செய்யமாட்டார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே இவரை அழைத்ததுமே வந்து செய்து கொடுத்தாரே என்ற நன்றியுணர்வு எனக்கு.

‘நீங்க நாளையும் அடுத்த நாளும் வந்திருந்து மீதியிருக்கற எல்லா ஸ்லாபுகளையும் இதே சைஸ்ல போட்டுகுடுத்தா நல்லாருக்கும்’ என்றேன்.

அவரோ ‘சார் நீங்க ஒரு ஷெல்புக்கு மட்டும் போட்டு குடுங்கன்னு சொன்னாதால எனக்கு இதுல அவ்வளவா விருப்பமில்லேன்னாலும் ராஜேந்திரன் சாருக்காக செஞ்சி குடுத்தேன். மீதியிருக்கறத ஒங்க மேஸ்திரிய வச்சி போட்டுக்கறதுதான் சார் நல்லது. அப்படி அவர் இந்த வேலைய செய்ய மாட்டேன்னு சொன்னா நா வந்து செஞ்சி தரேன்.’ என்றவாறு விலகிக்கொண்டார்.

ஆக என்னுடைய மேஸ்திரியை இந்த விஷயத்தில் எப்படி எதிர்கொள்வது என்று சிந்தனையில் அன்று இரவு முழுவதும் கழிந்தது.

அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் என்னுடைய வட்டார மேலாளர் என்னுடைய கிளைக்கு முந்தைய இரு மேலாளர்களுடன் வந்திருந்ததால் இதைப்பற்றி சிந்திக்கவே நேரமில்லாமற்போனது.

வார இறுதியில் என்னுடைய பொறியாளர் மட்டும் தனியாக வந்திருந்தார். அதுவும் நல்லதாக போனது.

அவரிடம் அவருடைய மேஸ்திரி இட்டு வைத்திருந்த தட்டுகளையும் நான் வேறொரு கொத்தனாரை வைத்து இட்டிருந்த தட்டுகளையும் காண்பித்தேன். அத்துடன் மேஸ்திரி கடப்பா பட்டறைக்குச் சென்று செய்திருந்த சில்மிஷத்தையும் சுருக்கமாக எடுத்து கூறினேன்.

அவருடைய மவுனமும் அவருடைய முகம் போன போக்குமே அவருடைய மனதிலிருந்த குற்ற உணர்வை தெளிவாக காட்டிக்கொடுத்தது. ஆனாலும் அதை குத்திக்காட்டாமல் இருந்தேன்.

‘சரி சார். நீங்க சொல்றது புரிஞ்சிது. நாளைலருந்து மேஸ்திரிய வரச்சொல்றேன்.. நீங்க சொல்றா மாதிரியே அவர் போட்டு தந்துருவார். அதுக்கு நான் கியாரண்டி.’ என்றவாறு கிளம்பிச் சென்றார்.

அவர் கூறியபடியே அடுத்த நாள் முதல் மேஸ்திரியும் அவருடைய ஆட்களும் நாள் தவறாமல் வந்திருந்து மீதமிருந்த வேலைகளை அடுத்த நாற்பத்தைந்து நாட்களில் முடித்து தர வீட்டைச் சுற்றிலும் இடவேண்டிய காம்பவுண்ட் சுவரைத் தவிர எல்லா வேலைகளும் மளமளவென முடிந்தது.

அடுத்து என்னுடைய வேறொரு நம்பகமான வாடிக்கையாளர் அமைத்து கொடுத்திருந்த ஆசாரி தன்னுடைய வேலைகளை துவங்கி அடுத்த இருபது நாட்களுக்குள் வீட்டுக்கு தேவையான வாசல் மட்டும் ஜன்னல் கதவுகள், சுவர் அலமாரிகளுக்கு தேவையான ப்ளைவுட் கதவுகள், ஷ்ட்டர்களை சிறப்பாக முடித்து கொடுத்தார்.

அடுத்து தூத்துக்குடியிலேயே பிரபலாமாயிருந்த ஒலி, ஒளி அமைப்பாளர்களான ஒரு நிறுவனத்தின் உரிமையாளருடைய மேற்பார்வையில் அடுத்த பத்து நாட்களில் மின்சார வயரிங் வேலைகளும் முடிந்தது.

அடுத்து ராஜேந்திரன் பரிந்துரைத்த மொசைக் தரை இடுபவரை வரவழைத்து அந்த வேலையும் அடுத்த இரண்டு நாட்களில் முடிந்தது.

அடுத்து என்ன?

வீட்டைச் சுற்றிலும் சுவரெடுக்க வேண்டியதுதான் பாக்கியிருந்தது.

அதையும் முடித்து என்னுடைய குடிசைக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பை என்னுடைய புதுவீட்டுக்கு நீட்டி எடுத்தால் மொசைக் தரை பாலிஷ் வேலையை துவக்கிவிடலாம்..

ஏற்கனவே சுவருக்கு வண்ணம் பூசுபவரை அமர்த்தி செம் ஒரு கோட் அடித்து முடித்திருந்ததால் தரை பாலிஷ் வேலை முடிந்ததும் வண்ணம் பூசும் வேலையையும் முடித்தால் கிரஹப்பிரவேசத்திற்கு நாள் குறித்திவிடலாம் என்ற நினைப்பில் படுக்கச் சென்றேன்..

சுற்றுச் சுவர் எழுப்புதல்.. புதுவீட்டுக்கு மின்சார இணப்பை நீட்டுதல்..

இந்த இரண்டு வேலைகளிலும் நான் எதிர்பாராத சிக்கல்கள் எழப்போகின்றன என்பதை உணராதவனாய்..


தொடரும்..

22 comments:

கோவி.கண்ணன் said...

இந்த pk வெற்றிகரமாக, தடைசெய்யப்பட்டதை இந்தியாவிற்கு இலவசமாக அனுப்புகிறது

pk என்றாலே ஊடுறுவல் செய்ய வழிவகுப்பது என்ற அர்த்தமோ :)))

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

PKன்னா போடா கிறுக்கான்னு வச்சிக்கலாம்:)

கோவி.கண்ணன் said...

pk - இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடிதான். ஆனால் வரவேற்புக்கு பஞ்சமில்லை.. என்பதும் தெரிகிறது ... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த pk ...அதற்குள்
இந்தியா மூடிய gate ஐ திறந்து அனுமதித்துவிடப் போகிறார்கள்.

pk ஆட்டம் முடியப் போகிறது

tbr.joseph said...

கண்ணன்,

இன்னைக்கி காலைல தி.பா 175 போட்டேன்..

அதுக்கப்புறம் அரை மணி கழிச்சி பி.கே பதிவு போட்டேன்.

பின்னது போட்டப்போ முன்னது காணாம போயிருச்சி..

சரின்னு முன்னத மீண்டும் பதிஞ்சேன்..

இப்போ பின்னது காணாம போயிருச்சி..

ஆனா பின்னதோட த.ம முகப்பு பக்க லிங்க் க்ளிக் பண்ணா இப்போ ரெண்டாவதா பதிஞ்ச பதிவு வருது..

பிகே பதிவ காணவே காணோம்..

மாயமா இருக்கு..

இப்போ ஒங்க பின்னூட்டத்துக்கு பதில்..

இங்க மூடியிருக்கற கதவ திறந்தாத்தான் பிகே பக்கம் யாருமே போமாட்டாங்களே..

போதும் கண்ணா போதும்னு மூடிறவேண்டியதுதான்:)

கோவி.கண்ணன் said...

//இப்போ பின்னது காணாம போயிருச்சி..

ஆனா பின்னதோட த.ம முகப்பு பக்க லிங்க் க்ளிக் பண்ணா இப்போ ரெண்டாவதா பதிஞ்ச பதிவு வருது..

பிகே பதிவ காணவே காணோம்..//

pk வை நம்பினால் எல்லாம் காணாமல் போய்விடும் என்று அனுபவித்து உணர்ந்திருக்கிறீர்கள்... குண்டு வெடிப்பு மட்டும் நடக்காவிட்டால் pk வின் பெயரை யார் சொல்லப் போகிறார்கள். pk சரியான போக்கிரி போல :)))

கோவி.கண்ணன் said...

ஐயா ... இப்பதான் பார்கிறேன் தலைப்பில் 'தி,பா' இருக்கிறது ... நல்ல காமடி :)))

tbr.joseph said...

pk சரியான போக்கிரி போல :)))

படு கில்லாடின்னு வச்சிக்கலாம்:(


கோவி.கண்ணன் said...
ஐயா ... இப்பதான் பார்கிறேன் தலைப்பில் 'தி,பா' இருக்கிறது ... நல்ல காமடி :)))

இது நீங்க போட்ட கடி ஜோக்க விட நல்லாருக்கில்ல:))

கோவி.கண்ணன் said...

நீங்கள்... நிலமை சரியானதும் தி.பா 175ஐ மீண்டும் பதிப்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லையென்றால் பின்னூட்டத்திற்கு பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும். எங்கேயே வெடிச்ச குண்டு உங்கள் பதிவுக்கும் சேர்த்தே வெடிச்சிட்டு போயிருக்கு.. எல்லாம் அந்த pk விற்கே வெளிச்சம்

கோவி.கண்ணன் said...

//
இது நீங்க போட்ட கடி ஜோக்க விட நல்லாருக்கில்ல:)) //
ஆமாங்க ஐயா ... என்னோட கடி எனக்கே சிரிப்பு வரவெக்கல ... ஆனா இந்த pk கலாட்டா தூக்கிசாப்பிட்டுடிச்சு :)))))

கோவி.கண்ணன் said...

அப்படியே உங்கள் pk அனுபவத்தை சேர்த்து ஒரு எச்சரிக்கை பதிவு ஒன்னு போட்டுவிடுங்கள்.. பாவம் எத்தனை பேர், பதிவு எழுத்திட்டு பின்னூட்டம் எங்கே என்று தேடி கஷ்டப்படப் போகிறார்களோ :)))))

G.Ragavan said...

அப்ப இருந்ததுக்குக் காங்கிரீட் ஸ்லாப்பு சரியாத்தான் இருந்திருக்கும். என்னோட அப்பார்ட்மெண்ட்டுல காங்கிரீட் ஸ்லாப் போடலாம்னு நான் சொன்னேன். அப்பாதான் மார்பிள் ஸ்லாப் போடச் சொன்னாரு. காசு கூட ஆகுமேன்னு யோசிச்சேன். கடைசீல அப்பா சொன்ன மாதிரியே செஞ்சாச்சு. ஆனா அது ஷெல்புல நெறைய எடமும் கொடுத்தது. ஆனா அதுக்கு முன்னாடியே பூஜை ஷெல்ப் வெச்சிட்டதால அதுல மார்பிள் போட முடியல. அதுனால என்ன...அதுல ஷெல்ஃபே பெருசு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அப்ப இருந்ததுக்குக் காங்கிரீட் ஸ்லாப்பு சரியாத்தான் இருந்திருக்கும். //

கரெக்ட். இப்பல்லாம் மார்பிள் மற்றும் கடப்பா ஸ்லாப் ரொம்ப சீப்பா கிடைக்குது. கடப்பா கல் ஸ்லாப்ங்கற கான்செப்டே அப்பத்தான் லேசா வந்துக்கிட்டிருந்தது. கிச்சன் சிங்க் மட்டுந்தான் கடப்பா கல்லுல வந்துக்கிட்டிருந்தது. என்ன ஒன்னு கடப்பா கல் ஸ்லாப வாங்குனமா ஃபிக்ஸ் பண்ணமான்னு இருக்கும். இந்த கான்க்ரீட் ஸ்லாப் போடற வேலை பெரிய தலைவலி பிடிச்ச வேலை..

tbr.joseph said...

எல்லாம் அந்த pk விற்கே வெளிச்சம் //

வெளிச்சம் Pottu Kattiruchi..

அப்படித்தானே:)

எச்சரிக்கை பதிவு போடலாம்தான்.. ஆனா அது வெறும் வெத்து எச்சரிக்கையா போயிரக்கூடாதில்ல?

ஒருவேளை இது எனக்கு மட்டும் நேர்ந்த அனுபவமாருக்கும்..

ஒரு freak instance!

மணியன் said...

நிரம்ப நாள் கழித்து மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு irony கவனித்தீர்களா ? தடை செய்யப்பட்ட தங்கள் ப்ளாக்குகளைக் காண பாகிஸ்தானியர் அமைத்த proxy இப்போது அவர்களது குண்டுவெடிப்பினால் தடைபட்ட நமது ப்ளாக்குகளைக் காண பயன்படுகிறது.

tbr.joseph said...

வாங்க மணியன்,

நிரம்ப நாள் கழித்து மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு irony கவனித்தீர்களா ? //

பார்த்தீர்களா? நண்பர்களை ஒரு மூனு நாள் சந்திக்காததே நிரம்ப நாட்கள் ஆனதுபோல் தெரிகிறது. எனக்கும் அப்படித்தான். அதனால்தான் தேடிப்பிடித்து இன்று பதிவு செய்தேன்.

தடை செய்யப்பட்ட தங்கள் ப்ளாக்குகளைக் காண பாகிஸ்தானியர் அமைத்த proxy இப்போது அவர்களது குண்டுவெடிப்பினால் தடைபட்ட நமது ப்ளாக்குகளைக் காண பயன்படுகிறது. //

உண்மைதான். பாக் மற்றும் இந்திய மக்களிடையே எந்த விரோதமும், க்ரோதமும் இல்லையே..

sivagnanamji(#16342789) said...

"ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது........"

தி.பா படிச்சேன்;சூரியன் பார்க்கப்போறேன்;அப்றம் துளசிதளம்
இது போதும் ;மற்ற டெக்னிகல் விபரம் நமக்கு வேண்டாம்

tbr.joseph said...

வாங்க ஜி!

மற்ற டெக்னிகல் விபரம் நமக்கு வேண்டாம் //

ரொம்ப கரெக்ட். எதுக்கு வீணா மூளைய போட்டு கசக்கறது..

பழூர் கார்த்தி said...

அப்பா, ஒருவழியா மேஸ்திரி மேட்ச் ஆடி முடிச்சுட்டாரா !!! இன்னும் சுவர் எழுப்புறதுலயும், மின்சார இணைப்புக்கும் எத்தனை ப்ரச்னையோ...

காத்திருக்கிறோம், சார் !!

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

அப்பா, ஒருவழியா மேஸ்திரி மேட்ச் ஆடி முடிச்சுட்டாரா !!! //

எல்லா ஆட்டத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்தானே?


இன்னும் சுவர் எழுப்புறதுலயும், மின்சார இணைப்புக்கும் எத்தனை ப்ரச்னையோ//

சில்லறை பிரச்சினை என்றுதான் நானனும் ஆரம்பத்தில் நினைதேன்.

என்ன செய்ய? ஆடற மாட்ட ஆடியும் பாடற மாட்ட பாடியுந்தான கறக்கணும்?

துளசி கோபால் said...

ஒருவழியாத் தி.பா. பார்க்க முடிஞ்சது.
ஆமாம்..//வாசல் மட்டும் ஜன்னல் கதவுகள், சுவர் அலமாரிகளுக்கு ...//

மற்றும்னு இருக்கணுமல்லவா?

சீக்கிரம் கிரஹப்பிரவேசத்துக்கு நாள் குறிங்க:-))))

போதுண்டா சாமின்னு இருக்கார் உங்க மேஸ்த்ரி:-))))

tbr.joseph said...

வாங்க துளசி,

எழுத்துப்பிழைன்னு ஒரு தமிழ் ஆசிரியர் நம்ம பளாக்ஸ்பாட்டுல இருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன். அது நீங்கதானோ:)

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க. தாங்ஸ்!

துளசி கோபால் said...

எழுத்துப்பிழை 'என்னிக்கு எனக்கு வைக்கப்போறார் ஆப்பு'ன்னு நான் நடுங்கிக்கிட்டு இருக்கேன். நீங்க வேற:-))))