21 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 176

சுற்றுச் சுவர் எழுப்புதல்..

சாதாரணமாக இரு நாடுகளுக்கிடையில் எல்லைப் பிரச்சினை இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இந்திய துணைகண்டத்தில் அமைந்திருக்கும் எல்லா நாடுகளுக்கிடையிலும் இந்த பிரச்சினை இருக்கிறது..

ஏன் இப்போதெல்லாம் மாநிலங்களுக்கிடையிலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

நாடுகளும் மாநிலங்களும் தங்களுக்குள் ஒரு கிலோ மீட்டர் நிள அகல நிலங்களுக்கு சண்டையிட்டுக்கொள்வதை பார்த்த நாம் ஒரு அடி நீள அகல துண்டு நிலத்துக்காக சண்டையிட்டுக்கொள்வதில் தப்பில்லையே..

கிராமப்புற, நகர மற்றும் பெரு நகர மக்களிடையிலும் இந்த போக்கு சர்வசாதாரணமாக காணப்படுகிறது.

ஓரடிக்கு ஈரடி நிலப் பரப்பிற்காக வெட்டுண்டு மாண்டவர் ஏராளம், ஏராளம். இதில் அப்பா-மகன், அண்ணன் - தம்பி என்ற உறவுகள் எல்லாமே அடிபட்டுப்போவதையும் பார்த்திருக்கிறோம்.

அப்படித்தான் நடந்தது என்னுடைய விஷயத்திலும்.

என்னுடைய நிலத்தில் வடக்கே பிரையண்ட் நகர் சாலை. தெற்கே ஒரு காலி வீட்டு மனை, கிழக்கேயும் இருந்த ஒரு காலி மனையில் ஒரு சிறிய ஓட்டு வீடும் அதன் பின்புறத்தில் ஒரு எடுப்பு கழிவறையும்.. மேற்கே நண்பர் ராஜேந்திரனின் வீடு.

என் நிலத்திற்கும் ராஜேந்திரனுடைய நிலத்திற்கும் இடையில் அவர் எழுப்பிய செங்கற்சுவர் இருந்தது. ‘சார் நமக்குள்ள இது என் சுவர், உங்க சுவர்னு பிரச்சினையெல்லாம் வரக்கூடாது. இது நான் வீடு கட்டறப்போ என்னுடைய பாதுகாப்புக்காக கட்டுனது. இந்த ஏரியா நான் வீடு கட்டுனப்போ பொட்டல் காடா கிடந்தது. அதனால நாலு பக்கமும் றடிக்கு சுவர என் செலவுலயே கட்டுனேன். இப்ப போய் உங்கபக்கம் கட்டுன சுவருக்கு நீங்க பாதி பணம் தாங்கன்னு கேக்கறதெல்லாம் நாகரீகமில்லா செயல்னு எனக்கு படுது. இருந்தாலும் ரெக்கார்டுக்கு இது நம்ம ரெண்டுபேருக்கும் பொது சுவர்னுன்னே வச்சுக்குவோம். அந்த பக்கம் நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம்.’ என்றார் பெருந்தன்மையுடன்.

னால் கிழக்கே இருந்த நில உரிமையாளரைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவருக்கு அதற்கு கிழக்கேயும் ஒரு நிலம் இருந்தது. அதில்தான் அவர் வீடு கட்டியிருந்தார். அவருக்கு ஒரேயொரு மகள். அவளுக்கு சீதனமாக கொடுக்க அந்த நிலத்துக்கும் என்னுடைய நிலத்துக்கும் இடையிலிருந்த நிலத்தை வாங்கி ஒரு சிறு அறை மட்டும் உடைய ஓட்டு வீட்டை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். நிலம் காலியாக கிடந்தால் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் மட்டுமே அந்த வீடு.

அவர் ஒரு அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகவும் அவருடைய மனைவி அரசு ரம்ப பள்ளியில் சிரியையாகவும் இருந்தனர். கணவர், மனைவி இருவருமே நல்லவர்கள்தான் என்றாலும் தங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களென ராஜேந்திரன் குடும்பத்தினர் மதிப்பதில்லை என்ற சிறுவருத்தம் இருந்தது. அத்துடன் அவர்கள் இருவருமே சுபாவத்திலேயே சட்டென்று சினம் கொள்பவர்கள் என்பதாலும் இவ்விரு குடும்பங்களிடையேயும் சுமுகமான உறவு இல்லை என்பதை ரம்பத்திலேயே அறிந்துவைத்திருந்த நான் அதைக்கண்டுக்கொள்ளாமல் இரு குடும்பத்தினரிடையேயும் சமமாகவே பழகிவந்திருந்தேன்.

அவர்தான் என்னுடைய மேஸ்திரியினுடைய ட்கள் சிமெண்டை களவாடியதை கேள்விப்பட்டு அவர்களை அடிக்கப்போய் அநியாயமாக அடிபட்டவர். என்னை கலந்துக்கொள்ளாமல் காவல்துறையினரிடம் புகார் செய்து பிறகு என்னுடைய வற்புறுத்தலால் அதை பின்வாங்கியவர். அந்த மனவருத்தம் வேறு இருந்தது.

அந்த மனவருத்தும் நான் வீட்டு கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பல சமயங்களிலும் சிறு சிறு சச்சரவாக வெளிபட்டுக்கொண்டே இருந்தது. சில சச்சரவுகள் உண்மையிலேயே சிறுபிள்ளைத்தனமானது என்பதால் அதை இங்கு எழுதினாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள். கவே அது தேவையில்லை என்று விட்டுவிடுகிறேன்.

னால் வீட்டைச் சுற்றி சுவர் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக என்னுடைய நிலத்துக்கும் அதற்கு கிழக்கே இருந்த அவருடைய நிலத்துக்கு இடையிலிருந்த நிலத்தை அளக்க முற்பட்டபோது எழுந்த பிரச்சினை சிறுபிள்ளைத்தனமானதல்ல.

அந்த இடைபட்ட நிலத்தை அளக்க முக்கியமான காரணம் சுவர் சாலையிலிருந்து என்னுடைய நிலத்தின் பின்புறம் வரை நேராக அதாவது கோணல்மாணலாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

ராஜேந்திரன் வீட்டுக்கும் என்னுடைய நிலத்துக்கும் இடைபட்ட தூரம் பத்தடி இருந்தது. அதாவது எந்த ஒரு வீட்டைச் சுற்றியும் ஐந்தடி தூர இடைவெளி இருக்க வேண்டும் என்பது முனிசிபல் நியதி. ராஜேந்திரனும் வீட்டைக்கட்டும்போது இந்நியதியைக் கடைப்பிடித்திருந்ததால் நிலத்தின் முகப்பிலிருந்து பின் விளிம்பு வரை இடைவெளி ஒரே சீராக பத்தடி இருந்தது.

னால் என்னுடைய நிலத்திற்கு கிழக்கே இருந்த நிலத்துக்கிடைய இருந்த இடைவெளி முகப்பில் பத்தடியில் துவங்கி, போகப் போக சுருங்கி சுமார் நான்கு, நான்கரை அடியாக இருந்தது நிலத்தை அளக்கும்போது தெரியவந்தது.

நிலத்தின் மொத்த அளவான 33X66 அடி என்று வைத்து பார்த்தால் என்னுடைய நிலத்தில் காலி இடம் 5X66=330 அடி இருக்க வேண்டும். நிலத்தை விட்டுத்தள்ளுங்கள். னால் சாலையிலிருந்து எழுப்பப்பட்டும் சுற்றுச் சுவர் நிலத்தின் தெற்கே கட்டப்படும் சுவரோடு சென்று சேரவேண்டுமென்றால் வழி நெடுக ஒரே சீராக ஐந்தடி நிலம் வேண்டியிருக்குமல்லவா?

எங்கள் இருவர் நிலத்துக்கும் இடையில் சுவருக்கு பதிலாக பனை மட்டைகளை வைத்து வேலியடித்திருந்ததால் அது நாளடைவில் இடம் பெயர்ந்து என்னுடைய நிலத்திற்குள் வந்திருக்கலாம் என்றார் என்னுடைய பொறியாளர். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

ஆகவே என்னுடைய பொறியாளர் பரிந்துரைத்தபடி என்னுடைய மேஸ்திரி மற்றும் அவருடைய ட்களை வைத்து பனைமட்டை வேலியை அப்படியே பெயர்த்தெடுத்து என்னுடைய அஸ்திவார விளிம்பிலிருந்து ஐந்தடி அளந்து என்னுடைய நிலத்தின் எல்லையில் பொருத்தினோம்.

எனக்கோ, என்னுடைய பொறியாளருக்கோ மிகச்சாதாரணமாக தெரிந்த அந்த செயல் அந்த நில உரிமையாளருக்கு அக்கிரம செயலாக தெரிந்தது. அதுவும் அவர்கள் இல்லாத நேரத்தில் நாங்கள் செய்த செயல் திருட்டுத்தனமான, அடாவடித்தனமானதாக தோன்றியது.

அவரும் அவருடைய மனைவியும் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அக்கம்பக்கத்து ஆட்கள் வத்தி வைக்க அன்று இரவே விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.

முந்தைய நாள்வரை என்னுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவர் இந்த பிரச்சினையை குறித்தும் என்னுடன் பேசியிருக்கலாம். மனிதர் அப்படி செய்யாமல் நேரே சென்று போலீசில் புகார் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அதுவும் யாரிடம்? என்னுடைய மைத்துனர் நில விவகாரத்தில் தலையிட்டு அடாவடியாக நடந்துக்கொண்ட ஆய்வாளரிடம். என்னுடைய நிலமும் அவருடைய அதிகார எல்லைக்குள் இருந்ததுதான் காரணம்!

எனக்கும் அந்த ஆய்வாளருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை என்பது விஷயம் சுமுகமாக தீர்க்கப்பட்டதும்தான் எனக்கு தெரியவந்தது.

ஆனால் அதை சுமுகமாக தீர்க்க நான் பட்டபாடு?

தொடரும்..

11 comments:

துளசி கோபால் said...

இந்த வேலிப் பிரச்சனை நீங்க சொல்றதுபோலதான். இதன் காரணமா நம்ம சொந்தம் ரெண்டு பேருக்குள்ளே
இப்பப் பேச்சு வார்த்தை நின்னு போச்சு.

அதுக்குத்தான் நிலம் வாங்குனதும் சர்வேயரை வச்சு அளந்து பெக் போட்டு வச்சுரணும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

அதுக்குத்தான் நிலம் வாங்குனதும் சர்வேயரை வச்சு அளந்து பெக் போட்டு வச்சுரணும்.//

கரெக்டா சொன்னீங்க. ஆனா எவ்வளவுதான் படிச்சிருந்தாலும், அனுபவம் இருந்தாலும் இந்த வேலி விஷயத்துலமட்டும் நாம் ஏந்தான் இப்படி நடந்துக்குறோமோ தெரியலீங்க.

அப்புறம் என்னதான் சுமுகமா முடிஞ்சாலும் மனசுக்குள்ள அந்த வருத்தம் இருந்துக்கிட்டேதான் இருக்கும்..

மணியன் said...

ஸ்வீடனில் வேலியே கூடாதாம். இயற்கை கொடுத்த நிலத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். முக்கியமாக யார்வீட்டு பண்ணைத்தோட்டங்களிலும் சுதந்திரமாக உள்ளே சென்று 'பிக்னிக்' கொண்டாடலாம். அது எப்படி முடியும் என்று கேட்டபோது அவர்களுக்கு விளக்கத் தெரியவில்லை, நமது பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாததால். நமது நாட்டில் அழகிய கடற்கறைகளையே தனிச்சொத்து ஆக்கி விடுகின்றனர்.
மன்னிக்கவும், உங்கள் பிரச்சினையில் உலகப் பிரச்சினையை பேசுகிறேன். நிலத்தகறாறு, தோட்டதிற்கானாலும் வீட்டிற்கானாலும் ஆதிகாலம் தொட்டு வருவது. சுற்றுச்சுவர் கட்டியபிறகும் இடித்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.:(

பழூர் கார்த்தி said...

என்ன சார் இது, நாளுக்கு நாள் சஸ்பென்ஸ் அதிகரிச்சிட்டே போகுது..

***

// என்னுடைய மைத்துனர் நில விவகாரத்தில் தலையிட்டு அடாவடியாக நடந்துக்கொண்ட ஆய்வாளரிடம். //

இதைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறீர்களா என்ன ? எழுதும் உத்தேசமுள்ளதா ??

***

இருந்தாலும், பனையோலைத் தட்டிகளை மாற்றி வைத்தப்போ, மாற்றி வைக்கும் முன்பே நீங்க பக்கத்து வீட்டுக்காரரிடம் கலந்து பேசி, சுமுகமா முடிச்சிருக்கலாமே சார்...

tbr.joseph said...

வாங்க மணியன்,

இயற்கை கொடுத்த நிலத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். முக்கியமாக யார்வீட்டு பண்ணைத்தோட்டங்களிலும் சுதந்திரமாக உள்ளே சென்று 'பிக்னிக்' கொண்டாடலாம். //

நம்ம நாட்டுல அப்படியொரு சட்டத்த கொண்டு வந்தாங்கன்னு வச்சிக்குங்க உரிமையாளர விரட்டிட்டு பக்கத்து வீட்டுக்காரன் சொத்த கபளீகரம் செஞ்சிருவான்.

நிலத்தகறாறு, தோட்டதிற்கானாலும் வீட்டிற்கானாலும் ஆதிகாலம் தொட்டு வருவது. சுற்றுச்சுவர் கட்டியபிறகும் இடித்தவர்களையும் பார்த்திருக்கிறேன்//

உண்மைதாங்க..

இந்தியா மாதிரி நாடும் ஸ்வீடன் மாதிரி ஒரு நாடும் இதே பூமியில இருக்குன்னு நினைச்சா..

tbr.joseph said...

வாங்க சோ பையன்,

இதைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறீர்களா என்ன ? எழுதும் உத்தேசமுள்ளதா ??//

முன்னமே எழுதியிருக்கேன். நீங்க சுமார் பத்து பதிவுகள் படிக்க வேண்டியிருக்கும். ஜூன் மாத ஆர்கைவ் ஃபைல்ஸ்லருக்கும்

பனையோலைத் தட்டிகளை மாற்றி வைத்தப்போ, மாற்றி வைக்கும் முன்பே நீங்க பக்கத்து வீட்டுக்காரரிடம் கலந்து பேசி, சுமுகமா முடிச்சிருக்கலாமே//

நூத்துல ஒரு வார்த்தை. அப்படி மட்டும் செஞ்சிருந்தா எவ்வளவோ பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம். ஆனா ஒன்னு அப்பவும் அவர் அதுக்கு ஒத்துக்கிட்டிருக்க மாட்டார்னு நினைக்கேன்..

dondu(#4800161) said...

இந்த ஆ-வை உங்க எடிட்டர் முழுங்கறதே, கவனிக்கக் கூடாதா?

இப்ப அந்த வீடு உங்களிடம்தான் இருக்கா இல்லை விற்று விட்டீர்களா?

தில்லியில் நான் இருந்த 20 வருடங்களும் யார் சொல்லியும் ஃப்ளாட் வாங்க மறுத்து விட்டேன். எனக்கு சென்னையில் இருக்கும் ஒரு வீடே போதும் என இருந்து விட்டேன். ஒரு வேளை ஃப்ளாட் வாங்கியிருந்தால் திரும்புகையில் நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டு வந்திருக்கலாம் என்று பலர் கூறினாலும் அதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

இந்த ஆ-வை உங்க எடிட்டர் முழுங்கறதே, கவனிக்கக் கூடாதா?//

ஆ! அப்படியா? ரெண்டொரு இடங்கள்லதான் விட்டுப்போயிருக்குன்னு நினைக்கிறேன்..

தூக்ககலக்கமாருக்கும்:(

ஓய்வு பெற்றபிறகுதான் விற்பதைக் குறித்து ஆலோசிக்கவேண்டும்..

ஆனால் மறந்தும் இனியொரு முறை வீடு கட்டுவதில் இறங்க மாட்டேன்.:)

sivagnanamji(#16342789) said...

அவரிடம் சொல்லிவிட்டு,அவரை வைத்துக்கொண்டே அந்த வேலையை
செய்திருந்தால் அனாவசியச் சங்கடங்கள் குறைந்திருக்கும்........

காக்கிச்சட்டை சந்தோஷமாக உங்களை
வரவேற்றிருப்பாரே?அவருடைய கைங்கரியம் என்ன?

tbr.joseph said...

வாங்க ஜி!

அவரிடம் சொல்லிவிட்டு,அவரை வைத்துக்கொண்டே அந்த வேலையை
செய்திருந்தால் அனாவசியச் சங்கடங்கள் குறைந்திருக்கும்........//

ஆமாங்க.. இப்ப நினைச்சி என்ன பண்றது.. அப்ப தோணலை..

காக்கிச்சட்டை சந்தோஷமாக உங்களை
வரவேற்றிருப்பாரே?

பின்னே:)

அவருடைய கைங்கரியம் என்ன? //

சொல்றேன்..

G.Ragavan said...

ஜோசப் சார், தவறு உங்கள் மீதும் இருக்கிறது. இரு வீடுகளுக்குப் பொதுவான இடம் என்று வருகையில் அவரிடமும் ஒரு பேச்சு சொல்லிக் கொண்டு செய்திருக்கலாம். சண்டை என்று ஆக வேண்டும் என்று இருந்தாலும்...இவ்வளவு ஆகியிருக்காது என்று எண்ணம்.