04 July 2006

திரும்பிப் பார்க்கிறேன் 165

அவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னரே இதைக் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள் என்பது அவருடைய அடுத்த கேள்வியிலிருந்தே தெரிந்தது.

‘சார் இந்த விஷயத்த பத்தி அப்பாக்கிட்ட நாங்க விவாதிச்சப்போ கூட அப்பா இத அம்மா பேருக்குத்தான் மாத்துவேன்னு சொல்லவே இல்லை.. கடைசியா நாங்க இதப்பத்தி விவாதிச்சிக்கிட்டிருந்தப்பத்தான் அண்ணா கோச்சிக்கிட்டு போய்ட்டார். அப்பாவுக்கும் ஒடம்புக்கு முடியாம போயிருச்சி. அதுக்கப்புறம் அப்பாவால ஒங்கக்கிட்ட இந்த லெட்டர் குடுத்துருக்க முடியாது. அதனால இந்த லெட்டர் அப்பாவோட விருப்பம்னு சொல்ல முடியாது.. இப்ப சொல்லுங்க.. இந்த லெட்டர்ல இப்படி எழுதறதுக்கு ஒங்கக்கிட்ட யார் சார் சொன்னாங்க, அண்ணாவா?’

ஆக.. இந்த விஷயம்தான் அந்த பெரியவரை மனவேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. இதில் இவருடைய அண்ணாவுக்கும் பங்கிருக்கிறது. அந்த நிறுவனமே பெரியவருடைய சுய முயற்சியில்தான் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறது என்பதை நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். இத்தனை செல்வமும் அவருடைய சுய சம்பாத்தியம். அவர் நினைத்திருந்தால் எல்லாவற்றையுமே தன் மனைவிக்கு எழுதிவைத்துவிட்டு போயிருக்கலாம். பிள்ளைகளால் ஒன்றும் செய்திருக்க முடியாது.

தன்னுடைய மரணம் சமீபத்திலிருக்கிறதென்பதை அறிந்திருந்தும் அவருடைய சொத்துக்களில் யார் யாருக்கு எவ்வளவு போய் சேரவேண்டும் என்று எழுதி வைக்காமலிருந்ததற்கு காரணமே குடும்பத்தில் இல்லாத ஒற்றுமைதான் என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அதைத்தான் சாடைமாடையாக அவர் என்னை சந்தித்தபோது கூறினார் என்பதை நினைத்துப் பார்த்தேன்.

அத்துடன் அவர் என்னுடைய வங்கியில் வைப்புநிதியில் முதலீடு செய்த சமயத்தில் என்னிடம் இந்த தொகை அவருடைய மரணத்திற்குப்பிறகு தன்னுடைய மனைவிக்குத்தான் போய் சேரவேண்டும் என்பதை தெரிவித்ததும் நினைவிலிருந்தது. ஆகவே என்ன சம்பவித்தாலும் அவருடைய இந்த கடைசி ஆசையை நிறைவேற்றுவது என்பதில் உறுதியாயிருந்தேன்.

‘என்ன சார், சொல்லுங்க.. இதுல எங்க அண்ணாவுக்கு ஏதும் பங்கு இருக்கா?’ என்றவரை பார்த்தேன்.

‘எதுக்கு கேக்கறீங்க? அவர் இப்படி சொன்னார்னே வச்சுக்குவோம். அத கேக்கறதுக்கு எனக்கென்ன பைத்தியமா? ஒங்கப்பா பேர்லருந்த ரசீதுகளையெல்லாம் அவரேதான் எங்கிட்ட கொண்டு வந்து கொடுத்தார்ங்கறது ஒங்களுக்கு தெரியுமில்லே?’

‘ஆமா சார். இல்லேன்னு சொல்லல.’

‘அன்றைக்கு அவரே என்கிட்ட சொன்னதத்தான் அடுத்த நாள் அவர் ஒங்க டிரைவர் மூலமா கொடுத்தனுப்புன வெத்துதாள்ல நான் டைப் பண்ணது. ஒங்களுக்கு சந்தேகமிருந்தா ஒங்க டிரைவர கூப்ட்டு கேளுங்க அடுத்த நாள் ஒரு கவர எங்கிட்ட கொண்டு வந்து கொடுத்தாரா இல்லையான்னு.’

அவர் வழக்கறிஞரைப் பார்த்த பார்வையிலிருந்தே அவருக்கு மேற்கொண்டு இதைப் பற்றி பேசி பயனில்லை என்ற பாவனை தெரிந்தது. எனக்கும் இதைக்குறித்து பேச விருப்பமில்லாமல், ‘சார் அதப்பத்தி பேசறத விட்டுட்டு இப்ப கப்போற காரியத்த பாருங்க. ஒங்கப்பாவோட சடங்கெல்லாம் முடியட்டும். அப்புறம் இதப்பத்தி பேசலாம்.’ என்றேன்.

அவர் சம்மதம் என்று தலையை அசைத்தாலும் வழக்கறிஞர் விடுவதாயில்லை.. பெரியவருடைய மகனுக்கு சாதகமாக பேசினால் தனக்கு நல்லது என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

‘சரி சார். அப்படியே இருக்கட்டும். ஆனா அவரோட மனைவி இத என் மகன்கள் இருவருக்கும் சமமா மாத்தி குடுத்துருங்கோன்னு சொல்றார்னு வச்சிக்குங்க..’ என்று இழுத்தார்.

எனக்கு கோபம் வந்தது. இருப்பினும் அடக்கிக்கொண்டு, ‘சார் சட்டம் தெரிஞ்ச நீங்க இந்த கேள்விய கேக்கக் கூடாது... பேங்கோட ரசீதுகள் எல்லாமே நான் – டிரான்ஸ்ஃபரபிள் தன்மையுடயைது. அந்த ரசீது காலாவதியான பிறகோ அல்லது அந்த முதலீட்டாளரின் மரணத்திற்குப்பிறகுதான் அதை வேறு யாருடைய பெயருக்காவது மாற்ற முடியும். அதனால நீங்க சொன்னாமாதிரி மேடம் எழுதிக் குடுத்தாக்கூட அத ஏத்துக்க முடியாது. வேணும்னா டெப்பாசிட் ரசீட்சையெல்லாம் மேடம் பேர்ல மாத்தி குடுத்துருவேன். அதுக்கப்புறம் நீங்க என்ன செய்யணுமோ செஞ்சிக்குங்க.. இதுக்கும் மேல இந்த விஷயத்துல எனக்கு ஒன்னும் செய்ய முடியாது..’ என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளை வைத்துவிட்டு எழுந்து நின்றேன்.. ‘நீங்க நாளைக்குள்ள புது கணக்கு திறந்திட்டா நல்லது. அதற்குண்டான படிவத்த பூர்த்தி செஞ்சி எல்லா பாகஸ்தர்ங்க கிட்டயும் கையெழுத்து வாங்கிட்டு நாளைக்கு நீங்களே வாங்க.. புது கணக்க திறந்துருவோம்..’

அவர்களும் வேறு வழியில்லாமல் எழுந்து வெளியேற நான் என்னுடைய அலுவலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அவர்களுடைய வாகனம் வளாகத்தைவிட்டு வெளியேறுவதற்கெனவே காத்திருந்ததுபோல் அவர்கள் அந்த பக்கம் செல்ல அந்த நிறுவனத்தின் மாஜி நிர்வாக பாகஸ்தர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்..

இதேதடா தலைவலியாய் போயிற்றே.. இவர் என்னத்த கேக்கப் போறாரோ என்று நினைத்தவாறு அவரை வரவேற்றேன்..

‘வாங்க சார்.. ஒங்க லெட்டர் மேல ஒடனே ஆக்ஷன் எடுத்துட்டேனே.. அவங்களும் வந்துட்டு இப்பத்தான் போறாங்க.’

அவர் நான் கூறாமலேயே இருக்கையில் அமர்ந்துக்கொண்டு மேசையில் ஏதாவது கடிதம் தென்படுகிறதா என்று பார்ப்பதை கவனித்தேன்.

‘என்ன சார் பாக்கறீங்க? அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியணுமா?’ என்றேன்..

அவர் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். ஒரே நாளில் அவருடைய நிலைமை தலைகீழாய் மாறிவிட்டதை அவருடைய தோற்றமே எனக்கு உணர்த்தியது.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல அவர் அறைக்குள் நுழையும்போதே உயர்ரக மேலைநாட்டு செண்ட் வாசனை தூக்கும். எப்போதும் பளபளக்கும் பட்டு சட்டை வேட்டியுடன் தான் வருவார்.. வெற்றிலையில் சிவந்த உதடுகளும், நெற்றியில் சந்தணப் பொட்டும் பார்ப்பதற்கே மனிதர் தெய்வீக கோலத்தில் இருப்பார்.

ஆனால் இப்போது அவருடைய கலைந்த தலைமுடியும், கசங்கிய சட்டையும் அவருடைய அப்போதைய நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டியது..

‘அந்த பயலுவளும் அந்த வக்கீலும் எதுக்காக சார் வந்தான்க?’ என்றார்.

இது ஒங்களுக்கு எதுக்கு சார் சொல்லணும் என்பதுபோல் பதில் பேசாமல் அவரையே பார்த்தேன். ‘எதுக்கு கேக்கீங்க?’

அவருக்கு சுர்ரென்று கோபம் வந்தது. ‘என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க? இது என்னோட லைஃப் பிரச்சினைசார். ஒங்க பழைய மேனஜர கேட்டுப்பாருங்க தெரியும். இந்த கம்பெனி வளத்தி எடுக்க நா என்ன பாடுபட்டேன்.. ஒங்க பேங்க்ல இந்த லோன வாங்கறதுக்கு நான் அலைஞ்ச அலைச்சல் என்ன.. இந்த பயலுக என்னைய வெளிய தள்ளிட்டு கம்பெனிய நடத்த நான் விட்டுருவனா? என்னோட பங்க பிரிச்சி தாங்கடான்னு கேஸ் போட்டு இளுத்தடிச்சிரமாட்டேன்? அதுக்கு முன்னால ஒங்ககிட்ட ஸ்ட்ரிக்டா ஒன்ன சொல்லிட்டு போலாம்னுதான் சார் வந்தேன்..’

‘சொல்லுங்க.’

‘இந்த விஷயத்துல நீங்க யார் பக்கமும் சேராம நடுவுல நில்லுங்க. அத விட்டுட்டு அவங்களுக்கு நல்லது செய்யறேன்னு எதையாவது தேவையில்லாம செஞ்சீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.’ என்று மிரட்டல் தொனியில் பேசியவரை வியப்புடன் பார்த்தேன். நான் அவருடைய மிரட்டலைக்கண்டு மிரண்டுப் போவேன் என்று நினைத்தார் போலிருந்தது.. என்னுடைய பார்வையிலிருந்த வியப்பு அவரை எரிச்சலைடய வைத்தது என்று நினைக்கிறேன்.

‘என்ன சார்.. அப்படி பாக்கீங்க? என்னைய பத்தி ஒங்களுக்கு தெரியாது.. ஒங்க மேல எனக்கு மதிப்பு இருக்கோ இல்லையோ அது வேற விஷயம்.. ஆனா இந்த விஷயத்துல நீங்க யார் பக்கமும் சேராம நிக்கணும்.. அதான் ஒங்களுக்கு நல்லது.. அப்புறம் இன்னொரு விஷயம்.’

‘சொல்லுங்க..’

‘எங்கப்பா கடைசியில போட்ட டெப்பாசிட் விஷயம்.. அத என்ன செய்யறதா உத்தேசம்?’

நான் அவருடைய கேள்வி புரியாததைப் போல் பார்த்தேன்.

‘அதான் சார்.. அப்பா போய் சேர்ந்துட்டார்.. அந்த அமவுண்ட பத்தி அந்த பய ஏதும் கேட்டானா?’

நான் அவருடைய சகோதரரிடம் கூறியதையே மீண்டும் விளக்கினேன்..

நான் பேசி முடித்ததும் அவர் கோபத்துடன், ‘சார் அந்த பணம் முழுசும் என் சம்பாத்தியம். என்னோட ஒழைப்புத்தான் அது.. அதனால நியாயமா அது என்னைத்தான் வந்து சேரணும்.. எனக்கு அந்த டெப்பாசிட்டோட பூரா டீடெய்ல்சும் வேணும்.. அத நீங்க யாருக்கும் பைசல் பண்ணாம இருக்கறதுக்கு நா கோர்ட்ல ஸ்டே வாங்கப் போறேன்.. அதனால அந்த ரசீதுகளோட பர்ட்டிகுலர்ஸ் குடுங்க..’ என்றார்.

நான், ‘சாரிங்க, நீங்க மூனு பிரதர்சுமா சேர்ந்து ஒரு லெட்டர் குடுத்தா வேணும்னா செய்யலாம். ஒங்களுக்கு மட்டும் தனியா குடுக்க முடியாது..’ என்றேன் அமைதியாக..

என்னுடைய மறுப்பை எதிர்பாராத அவர் பொங்கி வந்த கோபத்தில் பேச முடியாமல் தடுமாறியதைப் பார்த்தேன்..

‘ஒங்களுக்கு வேற ஒன்னுமில்லைன்னா எனக்கு வேற வேலை இருக்கு..’ என்று எழுந்து நின்றேன்..

அவரோ எழுந்து செல்வதாயில்லை. ‘அப்போ எனக்கு வேண்டியத குடுக்க மாட்டீங்க..’ என்றார் மிரட்டும் குரலில்..

‘சார்.. ஒங்களுக்கும் இந்த பேங்குக்கும் இருக்கற நல்ல ரிலேஷன்ஷிப்ப நீங்க பாழாக்கிறாதீங்க.. இந்த விஷயத்துல என்னால ஒன்னும் செய்ய முடியாது.. என்னெ மிரட்டறத விட்டுட்டு ஒங்களுக்கு சாதகமா காரியம் முடியற வரைக்கும் ஒங்க பிரதர்ஸ் கூட சமாதானமா போங்க.. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்..’ என்றவாறு அவரை பொருட்படுத்தாமல் நான் அறையை விட்டு வெளியேறி என்னுடைய உதவி மேலாளருடைய இருக்கையில் சென்றமர்ந்து என்னுடைய அலுவலை கவனிக்க துவங்கினேன்..

என்னுடைய உதவி மேலாளர் பணிக்கு திரும்ப இன்னும் இரண்டு நாட்கள் இருந்ததால் அவருடைய வேலையையும் சேர்த்து நானே செய்ய வேண்டியிருந்தது..

காலையிலிருந்து மாறி, மாறி வந்திருந்த இவர்களால் என்னுடைய அன்றாட வேலை பாதிப்படைய அன்று மாலைக்குள் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் தலைக்கு மேலிருந்தன..

என்னுடைய இருக்கைக்கு நான் வந்து அமரவும் அவர் கோபத்துடன் என்னுடைய அறையைவிட்டு வெளியேறியதை பார்க்க முடிந்தது..

தொடரும்..

11 comments:

sivagnanamji(#16342789) said...

"ஒற்றுமையா வாழ்வதாலெ உண்டு நன்மையே
வேற்றுமைகள் வளர்வதாலே விளையும் தீமையே..."

tbr.joseph said...

வாங்க ஜி!

இந்த பதிவோட மொத்த கருத்தையும் ரெண்டே வரியில சொல்லிட்டீங்க ஜி!

பின்னூட்டத்துல கலக்கற நீங்க ஒரு முழு பதிவு எழுதுங்க சார்.. எங்களுக்கும் பின்னூட்டம் போட ஒரு சான்ஸ் குடுங்க:)

துளசி கோபால் said...

குடும்பமே மாறி மாறிவந்துக் கூச்சல் போட்டுட்டுப் போயிருக்காங்க.

இவுங்ககிட்டே அந்தம்மாதான் கஷ்டப்படப்போகுதுபோல இருக்கே.

tbr.joseph said...

வாங்க துளசி,

இவுங்ககிட்டே அந்தம்மாதான் கஷ்டப்படப்போகுதுபோல இருக்கே.//

அந்த அம்மாவ சொல்றீங்க.. நான் பாத்தப்போ நல்லாருந்த மனுசன ஒரே வாரத்துல படுத்த படுக்கையாகி சாகடிச்ச பிள்ளைங்கதானே..

ஆனா அவங்களோட பணத்தாசை அவங்களையே அழிக்கப்ப் போவுது பாருங்க..

இப்படிப்பட்ட பிள்ளைங்களோட முடிவ நான் பல குடும்பங்கள்ல பார்த்திருக்கேன். அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்த அபகரிச்சி அத வேத்து மனுசங்கக்கிட்ட கோட்டை விட்டுட்டு நிக்கறத..

G.Ragavan said...

அடடா! அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே!

பணம் பத்தும் செய்யுங்குறது உண்மையாத்தான இருக்கு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே!//

சாதாரணமா அவசரமான உலகத்துலன்னு சொல்லும்போது எனக்கு தலைக்கு மேல வேல இருக்கும்போது ஒன்னெ பத்தி எங்கப்பா கவலைப்படறதுங்கற மாதிரி இருக்கும்..

ஆனா பணம்னு வந்துட்டா சகோதரர்கள் என்ன அப்பா பிள்ளை உறவே மறந்துபோயிருதே..

பாலசந்தர் கணேசன். said...

ஒவ்வோரு வேலையிலும் விதவிதமான அனுபவங்கள், எத்தனை விதமான மனிதர்கள். வெரைட்டிதான் வாழ்க்கையில் ருசியோ!!

tbr.joseph said...

வாங்க கணேசன்,

ஒவ்வோரு வேலையிலும் விதவிதமான அனுபவங்கள், எத்தனை விதமான மனிதர்கள். //

நீங்க சொல்றது ரொம்ப சரி..

இந்த மாதிரி விதவிதமான மனிதர்களை சந்திப்பதுதான் ஒரு வங்கி மேலாளர்களுக்கு கிடைக்கும் அற்புதமான வரம். வங்கி மேலாளருக்கும் அவருடைய வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்படும் உறவும் ஒரு அலாதியான உறவு என்றால் மிகையாகாது..

அதைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே போகலாம்..

துளசி கோபால் said...

ராகவன்,

பாட்டோட அடுத்த முக்கியமான வரிகளை விட்டுட்டீங்களே.

'ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.'

tbr.joseph said...

துளசி,

கவிஞர் 'ஆசை கொள்வதில்' என்பதை 'பெண் கொள்வது' என்று பொருள்படும்படி அமைத்திருப்பார் என்று நினைக்கிறேன்..

சரிதானே..

செந்தழல் ரவி said...

// COMMENT NOT FOR PUBLISHING


தமிழ்மணம் நிர்வாகிக்கு...

என் மறுமொழி நிலவர சேவை நீக்கி உள்ளீர்கள் - என்னை கலந்து ஆலோசிக்காமல். ஆகவே எனது விளக்க கடிதம் இதனுடன் அனுப்புகிறேன்.

அன்னை தெரசா பற்றி ஒரு தூஷன பின்னூட்டம் வந்தது எனது இந்த பதிவில்.

http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html

என் மறுமொழி சேவை நீக்கியதாக தெரிவித்தது இந்த பதிவு

http://thamizmanam.blogspot.com/2006/06/blog-post.html

ஆரம்பத்தில் இருந்து வஜ்ரா மீது ஒரு சந்தேகம் எனக்கு...காரணம் அவர் பின்னூட்டம் இட்டு சில வினாடிகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டம் வந்தது...

பிறகு அவர் தனிமடலில் கூறினார்..குமரன் மடல் செய்தார்..அது அவராக இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஆள் அல்ல என்று...ஆகவே சந்தேகம் தீர்ந்தது..

இது நடந்தது வெள்ளி அன்று..

அடுத்த இரு நாட்களும் விடுமுறை எனக்கு...

நான் அந்த பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்க வேறொரு காரணமும் உண்டு..வெளியிடத்தேவை இல்லை என்று நினைத்தேன்..இப்போது வெளியிடுகிறேன்...

ஒரு போலியாரின் போர்வையில் ஒளிந்துகொண்டு பல போலிகள் இங்கே...அனைத்து பதிவுகளிலும் கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கின்றனர்...காலியிலும் போலிபின்னூட்டம், இரவிலும் போலி பின்னூட்டம், அதிகாலையிலும் போலி பின்னூட்டம்...

போலியாருக்கு வேறு வேலையே கிடையாதா...போலி பின்னூட்டமிடுவதை தவிர..ஆக பலர் போலியின் போர்வையில் போலி பின்னூட்ட கைவரிசை காட்டுகின்றனர் என்று தெரிந்தது...

ஆகவே,போலி போலிகளை கண்டறிந்து - தோலுரிப்பது தான் நோக்கம்..

கணிணி நெட்வொட்க் ஆராய்ச்சி மற்றும் பணி துறையில் கால் பதித்து வெற்றி நடைபோடும் என் கல்லூரி நண்பர்கள் உதவியுடன் வஜ்ரா பெயரில் / அல்லது வஜ்ராவே போட்ட சர்ச்சைக்குரிய பின்னூட்டத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்...

என் கல்லூரி நன்பர் ஒருவர் கூகுள் நிறுவனத்திலும் பணிபுரிவதாக கேள்வி.

நன்பர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்..அவர்களுக்கும் விடுமுறை..எனக்கும் விடுமுறை..வெள்ளியன்றே தொலைபேசினேன்..அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் வெள்ளி மாலை இந்திய நேரத்திற்க்கு அவர்கள் பணி முடித்து சென்றுவிட்டனர்...

ஆகவே, திங்கள் அன்று அவர்களிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்.

ஆனால் நீங்கள் - அவசரப்பட்டுவிட்டீர்..என்னிடம் ஒரு மடல் அனுப்பி கேட்டிருந்தால் நான் தகுந்த தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பேன்..

இனிவரும் காலங்களிலாவது என் போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க யாராவது புகார் கொடுத்தால் - இருதரப்பு வாதங்களையும் கேட்டு பிறகு முடிவெடுக்கவும்...

மேலும் மறுமொழி நிலவரச் சேவை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்..

இதன் நகல்:

காசி
லக்கிலூக்
விடாது கருப்பு
குமரன்
வெற்றி
முத்து தமிழினி
டோண்டு
ஜெயராமன்
வஜ்ரா
கானா பிரபா
கொங்கு ராசா
துளசி கோபால்
இளவஞ்சி
அனுசுயா
கவிதா
நாமக்கல் சிபி
பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
பாஸ்டன் பாலா
<< உங்களை எப்படி மறந்தேன்னு தெரியலை>>>

இதனை என் பதிவில் இடுகிறேன்.