30 June 2006

ஆறோ இது யாரோ..

ஆறோ இது யாரோ..

டோண்டு  அவர்களின் பதிவில்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று துவங்கியிருந்தார்..

அந்த திருமறைக் கட்டளைகள் ஆறு எவை என்று வேதாகமம் கூறுகிறது..

அவை..

களவு செய்யாதே
பொய் சொல்லாதே
கொலை செய்யாதே
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே
பிறர் தாரத்தை விரும்பாதே
தாய் தந்தையரைப் போற்று


எனக்கு பிடித்த மற்ற ஆறு

திரைப் படங்கள்

பார் மகளே பார்,
பாச மலர்,
பாவ மன்னிப்பு,
பார்த்தால் பசி தீரும்,
படித்தால் மட்டும் போதுமா,
மோட்டார் சுந்தரம் பிள்ளை

நடிக, நடிகைகள்

நடிகர் திலகம்,
நடிகையர் திலகம்,
செளகார் ஜானகி
பத்மினி
சரோஜா தேவி
ரங்கா ராவ்

திரைப் பட பாடல்கள்

பார் மகளே பார்..
மலர்ந்தும் மலராத..
ஆலய மணியின் ஓசையை..
அண்ணன் காட்டிய வழியம்மா ..
கண்ணிரண்டும் தாமரையோ.. சின்ன சின்ன கண்ணனுக்கு..
கண்ணா கருமை நிறக் கண்ணா..

எழுத்தாளர்கள்

ஜெயகாந்தன்
கல்கி
நா. பார்த்தசாரதி
சாண்டில்யன்
மணியன்
மெரீனா

மலர்கள்

மல்லிகை
ரோஜா (சிகப்பு என்றால் அதிகமாகவே)
தாமரை (குளத்தில் இருக்கும்போது)
டிசம்பர் கனகாம்பரம்
ஜின்னியா
கேரளாவில் விஷ¤ சமயத்தில் சரமாக பூத்து தொங்கும் மஞ்சள் பூ.. (பெயர் தெரியவில்லை.. சென்னையிலும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.)

வலைஞர்கள்

பின்னூட்ட அரசி துளசி
இப்போது பின்னூட்ட ராசாகவ வலம் வரும் சிவஞானம்ஜி
டோண்டு
கோ. ராகவன்
நாமக்கல் சிபி (என்னை இங்கு அழைத்து வந்ததால் மட்டுமல்ல)
டி.. தி ட்ரீமர் (ப்ளாக் தேச வலைஞர்)

அதற்காக மற்றவர்களை பிடிக்காது என்பதல்ல..ஆறுக்கு மேல எழுத முடியாதேன்னுதான்..

அன்புடன்,
டிபிஆர் ஜோசஃப்

24 comments:

G.Ragavan said...

ஆறு ஒங்களையும் இழுத்துக்கிட்டு ஓடுது போல.

ஜோசப் சார். தமிழ் சித்தாந்தத்தில் ஆறு மிகவும் உயர்ந்தது. அந்த ஆறைத்தான் ஆறுமுகமாக உருவகம் செய்திருக்கிறார்கள். இதுக்கு இன்னமும் விளக்கமும் சொல்லலாம். பக்கம் பக்கமா வரும்.

எல்லாம் சிவாஜி படமா சொல்லீருக்கீங்க. எனக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.

சேவியர்ஸ்ல ஒரு வாட்டி ஒரு வாத்தியாரு.....பேரு நெனவில்லை...ஸ்டீபனா...தெரியலை மறந்து போச்சு. எம்.ஜி.ஆர் யாருக்குப் பிடிக்கும்னு கேட்டாரு. எங்காதுல பிடிக்காதுன்னு விழுந்தது. ஒடனே கையத் தூக்கீட்டேன். அப்ப அவர்தான் முதல்வர்னு நெனைக்கிறேன். சரியா நினைவில்லை. அவரு கையத் தூக்குனவங்களை எல்லாம் அவரச் சுத்தி உக்கார வெச்சி லெக்சர் குடுத்தாரு. "நீ புதுக்கிராமம் தானலே...ஏந்தூக்குன கைய"ன்னு கேட்டு கிண்டல் பண்ணீட்டாரு. போதும்டா சாமி. :-))

dondu(#4800161) said...

"பார் மகளே பார்,
பாச மலர்,
பாவ மன்னிப்பு,
பார்த்தால் பசி தீரும்"

இந்த 4 படங்களுமே பா வரிசை புகழ் பீம்சிங்கால் டைரக்ட் செய்யப்பட்டவை. கொஞ்ச நாளைக்கு எல்லோரும் அவரை பாம்சிங் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஆறு ஒங்களையும் இழுத்துக்கிட்டு ஓடுது போல.//

எல்லாம் நா.சிபியின் வேலை. வேல மெனக்கெட்டு எனக்கு மயில் அனுப்பி வாங்கய்யா வந்து விளையாடுங்கய்யா என்றார்.. அவர் சொல்லை தட்ட முடியுமா? அதான்..:)

சரி.. புதுத் தெருவுக்கும் மக்கள் திலகத்துக்கும் ஏதாச்சும் விரோதமா என்ன?

சார்லஸ் தியேட்டர் ஓனர் இருக்கறதாலயோ.. அவர் ம.தி படத்த போட்டு நா பார்த்த ஞாபகம் இல்லை..

tbr.joseph said...

வாங்க டோண்டு சார்,

பார் மகளே பார்,
பாச மலர்,
பாவ மன்னிப்பு,
பார்த்தால் பசி தீரும்"//

அவையெல்லாம் வெறும் திரைப்படங்களா சார்? காவியங்கள்..

உணர்ச்சி பூர்வமான நடிகர் திலகத்தின் நடிப்பை மறக்க முடியுமா?

பார்த்து பிறகும் பத்துநாளைக்கு கனவில் வந்து நிற்குமே அவருடைய நடிப்பு.. இப்பவும் நடிக்கறாங்களே..

ஹூம்..

sivagnanamji(#16342789) said...

டோண்டுவைப் பிடிச்சிருந்தா போண்டாவையும் பிடிச்சிருக்கனுமேங்க
ஓ....பிடிச்ச ஆறு தின்பண்டங்களை சொல்லலியோ
ஜி ராகவன் பின்னூட்டம் சிறப்பு

முத்து(தமிழினி) said...

sir,

என்ன சார் இது? ஒரே மலரும் நினைவுகளா இருக்கு...

tbr.joseph said...

வாங்க ஜி!

டோண்டுவைப் பிடிச்சிருந்தா போண்டாவையும் பிடிச்சிருக்கனுமேங்க//

பின்னே? பிடிக்காமயா?

ஓ....பிடிச்ச ஆறு தின்பண்டங்களை சொல்லலியே//

எங்க பிடிச்சத எழுதினாலே வீட்ல திட்டுவாங்களோன்னுதான்.. உடம்பு இருக்கற நிலையில இந்த ஆசையெல்லாம் வேற இருக்கான்னு சண்டைக்கு வந்துட்டா.. அப்புறம் இப்ப கிடைச்சிக்கிட்டிருக்கறதும் கிடைக்காம போயிருமேன்னுதான்..

ஜி ராகவன் பின்னூட்டம் சிறப்பு//

அவருக்கென்னங்க.. வார்த்தையிலயே விளையாடுவார்..

ஜால வித்தகராச்சே..

அவர் பின்னூட்டமே ஒரு பதிவு மாதிரி இருக்கும்..

'என்ன ஐசா?'

சேச்சே.. யார்ப்பா அது?

tbr.joseph said...

வாங்க முத்து..

என்ன சார் இது? ஒரே மலரும் நினைவுகளா இருக்கு... //

பின்னே.. இப்பருக்கறத பத்தி எழுதறதுக்குத்தான் ஒங்கள மாதிரி இளவட்டங்கள் இருக்கீங்களே..

ஜோ / Joe said...

ஆகா! நடிகர் திலகம் ரசிகர் கூட்டம் பெருசாயிட்டே போகுது.

ஜோசப் சார்,
நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் உண்மையிலயே காவியங்கள் தான் .நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பு ,அற்புதமாக பாடல்கள் ,வசனங்கள் ,ஆழமான கருத்துக்கள் ..இந்த படங்களையெல்லாம் எத்தனை முறை பார்த்தேன்னு தெரியல்ல .போஸ்டர் பார்த்தா போய் உக்காந்துர்ரது தான்.

tbr.joseph said...

வாங்க ஜோ!

நடிகர் திலகம் ரசிகர் கூட்டம் பெருசாயிட்டே போகுது.//

ஜோ.. நடிகர் திலகத்துக்கு இந்த உலகம் முழுசும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளைப் பேசுபவர்களிலும் ஒருவராவது அவருடைய ரசிகர்கள் இருப்பார்கள்..

ஆனால் என்ன இடையில் அவருக்கென தகுந்த பாத்திரங்கள் இல்லாமல் போனபோது வெறுமனே நடித்துவிட்டு போன காலகட்டத்தில்தான் என்னைப் போன்றவர்கள் அவரை விட்டு விலகிப்போனோம்..

நான் குறிப்பிட்ட ஆறுபடங்களுமே இன்னும் நூறு வருடங்கள் கழித்து வந்தாலும் பார்க்கலாம்..

கோவி.கண்ணன் said...

ஜோசப் அய்யா,
ரங்க ராவ் ... எனக்கும் பிடிக்கும் ... படித்தால் மட்டும் போதுமா படத்தில் அவருடைய நடிப்பு அருமை அருமை. அவரைப் போல தற்பொழுது நடிப்பவர் கே.எஸ் கோபால கிருஷ்ணன் (தெலுங்கு நடிகர் ... குருதிப்புனல், பாசவலை படத்தில் பார்த்திருக்கலாம்) தோற்றம் நடிப்பு இதில் ரங்கா ராவின் பாதிப்பு கோபால கிருஷ்ணனிடம் அதிகம் இருக்கிறது

பெரியவங்களையெல்லாம் கலாய்க்கக் கூடாது என்று சங்கத்தினர் அன்பாக கண்டித்து கூறியதைத் தொடர்ந்து கஷ்டப்பட்டு எழுதினேன்

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

கே.எஸ். கோபால கிருஷ்ணன்? குருதிப்புனல்ல என்ன கேரக்டர்ல வரார்? பாசவலை பார்க்கவில்லை..

பெரியவங்களையெல்லாம் கலாய்க்கக் கூடாது என்று சங்கத்தினர் அன்பாக கண்டித்து கூறியதைத் தொடர்ந்து கஷ்டப்பட்டு எழுதினேன் //

அடடா..சிரிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கும்.. போயிருச்சி:)

ஜோ / Joe said...

// அவரைப் போல தற்பொழுது நடிப்பவர் கே.எஸ் கோபால கிருஷ்ணன் (தெலுங்கு நடிகர் ... குருதிப்புனல், பாசவலை படத்தில் பார்த்திருக்கலாம்)//

கோவி.கண்ணன்,
நீங்கள் கே.விஸ்வநாத்- ஐ தவறாக கோபால கிருஷ்ணன் என்று சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன்.

கே.விஸ்வநாத் சலங்கை ஒலி ,சிப்பிக்குள் முத்து ,பாசவலை படங்களின் இயக்குநரும் கூட.

tbr.joseph said...

கே.விஸ்வநாத்?

கரெக்ட் ஜோ..

ஆமாம் அசப்பில் பார்ப்பதற்கும் அவரைப் போலவே இருப்பார்.

பாசவலைன்னா அவரும் பார்த்திபனும் சேர்ந்து நடிச்ச படமா?

தொலைக்காட்சி தொகுப்பில் ஓரிரு காட்சிகள் பார்த்திருக்கிறேன்..

ஆமாம் அப்படியே ரங்கா ராவைப் போலவே வசன உச்சரிப்பு.. அலட்டிக் கொள்ளாத நடிப்பு..

கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணன்,
நீங்கள் கே.விஸ்வநாத்- ஐ தவறாக கோபால கிருஷ்ணன் என்று சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன்.
//
கே.விஸ்வநாத் ...அய்யா நீங்க சொல்றது சரிதான் அய்யா ... சரிதான்.

ஜோ / Joe said...

//பாசவலைன்னா அவரும் பார்த்திபனும் சேர்ந்து நடிச்ச படமா?//

ஜோசப் சார்,
அது வேற படம் .பாசவலை கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல் மீனவராக நடித்து தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'சுப சங்கல்பம்' என்ற படம் 'பாசவலை' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றி வெளிவந்தது. அதில் கே.விஸ்வநாத்-ம் நடித்திருந்தார்

tbr.joseph said...

கே.விஸ்வநாத் ...அய்யா நீங்க சொல்றது சரிதான் அய்யா ... சரிதான். //

ஆஹாஹா.. என்ன பணிவு என்ன பணிவு.. கண்ணந்தானே.. இது?

கோவி.கண்ணன் said...

//பாசவலைன்னா அவரும் பார்த்திபனும் சேர்ந்து நடிச்ச படமா?//
பாசவலை - கமல் நடித்த ஒரிஜினல் தெலுங்குபடத்தின் டப்பிங்.

tbr.joseph said...

'சுப சங்கல்பம்' என்ற படம் 'பாசவலை' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றி வெளிவந்தது. அதில் கே.விஸ்வநாத்-ம் நடித்திருந்தார் //

அப்படியா? தாங்ஸ்..ஜோ

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
'நடிகையர் திலகம்' சாவித்ரியும் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை ..நவராத்திரி ,பார்த்தால் பசி தீரும் ,பாசமலர்-ன்னு நம்ம நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்குற ஒரே நடிகை .தெலுங்கு தாய்மொழியா இருந்தாலும் ,'திருவிளையாடல்' படத்துல அவங்க தமிழ் உச்சரிப்பை கவனிச்சீங்களா ? பிறவி நடிகை!

tbr.joseph said...

தெலுங்கு தாய்மொழியா இருந்தாலும் ,'திருவிளையாடல்' படத்துல அவங்க தமிழ் உச்சரிப்பை கவனிச்சீங்களா ? பிறவி நடிகை! //

இந்த காலத்துல வடக்குலருந்து இம்போர்ட் பண்றா மாதிரி அன்னைக்கு ஏறக்குறைய எல்லா தமிழ்படத்துலயும் தெலுங்கு நடிகைகள்தானே..

ஆனாலும் அவர்களுடைய தமிழ் உச்சரிப்பும், முகபாவனையும் எத்தனை அழகாக இருக்கும்?

சாவித்திரியின் அவல நிலைக்கு காரணமாயிருந்த ஜெமினி கணேசனின் படத்தை பார்ப்பதில்லை என்ற சபதமும் கூட ஒருகாலத்தில் எடுத்திருந்தவன் நான்..

G.Ragavan said...

// ஜி ராகவன் பின்னூட்டம் சிறப்பு//

அவருக்கென்னங்க.. வார்த்தையிலயே விளையாடுவார்..

ஜால வித்தகராச்சே..

அவர் பின்னூட்டமே ஒரு பதிவு மாதிரி இருக்கும்..//

கிழிஞ்சது போங்க.....இப்ப ஒன்னும் கைவலியில சரியா விளையாட முடியல.

ஜோசப் சார். ஞாயித்துக்கெழம மீட்டிங்குக்கு கோட்டூர்புரம் வழியாப் போவீங்களா? போனா என்னையும் கூட்டீட்டுப் போங்க சார்.

G.Ragavan said...

// சரி.. புதுத் தெருவுக்கும் மக்கள் திலகத்துக்கும் ஏதாச்சும் விரோதமா என்ன?

சார்லஸ் தியேட்டர் ஓனர் இருக்கறதாலயோ.. அவர் ம.தி படத்த போட்டு நா பார்த்த ஞாபகம் இல்லை.. //

புதுக்கிராமத்துல ஓரளவுக்குப் படிச்ச கூட்டம். அதுனால பொதுவா எம்.ஜி.ஆர் படமெல்லாம் பாக்க மாட்டாங்க. சிவாஜி படம்தான் பாப்போம்னு சொல்லிக்கிறது புதுக்கிராமம் ஸ்டேட்டஸ். சார்லஸ் வீடெல்லாம் பின்னாடி வந்தது சார். கன்னியம்மா கடைக்குப் பக்கத்துல இருந்த எடம் வேறாளோடது. இவரு எப்படியோ அடிச்சுப் பிடிச்சு வாங்கீட்டாருன்னு சொல்வாங்க.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கிழிஞ்சது போங்க.....இப்ப ஒன்னும் கைவலியில சரியா விளையாட முடியல.//

கைவலியா? இப்ப எப்படியிருக்கு.

அப்புறம் கோடம்பாக்கத்திலிருந்து ஹோட்டலுக்கு ஒரு பதினஞ்சி ட்ரைவ்தான். கோட்டூர்புரம் வழியா போவேணாம்..

ஆனா ஒங்களுக்காக வேணும்னா வரேன்.. அது ஒன்னும் பெரிய கஷ்டமில்லை.

என் மொபைல் தெரியுமில்லே.. ஒரு போன் போட்டு எங்க வந்து பிக்கப் செய்யணும்னு சொல்லுங்க..

வந்துடறேன்.. கன்வீனராச்சே இது கூட செய்யலன்னா எப்படி..

மொபைல் மறந்துருச்சா 98407 51117