19 ஏப்ரல் 2006

ஒன்னு வாங்குனா ஒன்னு இனாம்!!

அரிசி வேணுமா அரிசி!!

ஒரு கிலோ வாங்கினா ஒரு கிலோ இணாமுங்க..

இன்றைய Financial Express நாளிதழில் Rice War in Tamilnadu என்ற ஒரு செய்திக் கட்டுரையைப் படித்ததும் ஏன் நாமும் இன்றைக்கு இதை எழுதி சிலரை வம்புக்கு இழுக்கக் கூடாது என்று நினைத்தேன்.  அதில் வந்திருந்த கார்ட்டூனையும் சேர்த்திருக்கலாம். ஆனால் முயன்றும் அதை lift செய்ய இயலவில்லை.

அது போகட்டும். விஷயத்துக்கு வருவோம்..

சில நாட்களுக்கு முன் Is D(MK) Desperate? என்ற ஒரு கட்டுரையை என்னுடைய ஆங்கிலப் பதிவில் இட்டு சிலருடைய கோபத்தை சம்பாதித்தேன். அதில் ஒருவர் 'ஏன் வேணும்னா ‘ஜெ’ விமரிசித்து எழுதுங்களேன்' என்பதுபோல் சவாலும் விட்டிருந்தார்.

அப்போது எனக்கு தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை. ‘ஜெ’ அவர்களே மனமுவந்து அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை நேற்று வழங்கியதன் விளைவே இக்கட்டுரை..

சரிங்க. மு.க. தான் ஆட்சியை எப்பாடு பட்டாவது பிடித்துவிடவேண்டும் என்று தனக்கு கனவில் தோன்றியவற்றையெல்லாம் மக்களுக்கு அளிப்பதாக வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். ‘நான் ஆட்சியில் இல்லை அதனால் ‘எதை’ வேண்டுமானாலும் அறிவிக்கலாம்’ என்று அவரே ‘ஜெ’ வின் அறிக்கையை விமர்சித்து கூறியதிலிருந்து அவருடை வாக்குறுதிகள் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கோடியிட்டு காட்டியிருக்கிறார். ஆகவே அதை மறந்துவிடுவோம்..

ஒரு ஆளுங்கட்சியின் தலையான தலைவர்.. முதலமைச்சர், எப்படிங்க இப்படி ஒரு அறிக்கையை விடலாம்? அதுவும் தேர்தல் களத்தில்? கம்பை அவரே எதிர்கட்சிகளிடத்தில் கொடுத்துவிட்டு அடிங்கள் என்று குனிந்து கொடுப்பது போலல்லவா இருக்கிறது?

இதில் வை.கோவின் நிலைதான் பரிதாபம். அவர் ‘ஜெ’விடம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஒழுங்காக தினமும் மு.க வின் வாக்குறுதிகளை அக்கு வேறு ணி வேராக கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார். ‘ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு இவர் குடுப்பாராம் நாம வாங்கிக்கணுமாம். ஏன்யா தெரியாமத்தான் கேக்கேன்..எங்களோட ஒப்பில்லா தலைவியின் தலைமையில் நடந்துக்கொண்டிருக்கிற மக்களாட்சியில் மூனு ரூவாய்க்கு குடுக்கறப்பவே 1300 கோடி துண்டு விழுதுங்கறாங்க. இதுல இவரு ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்கு.. துண்டு விழுதறத சன் டிவிலருந்து குடுப்பாங்களா?’ என்று மேடைதோறும் முழங்கிக்கொண்டிருந்தவர் இனி என்ன செய்யப் போகிறார், பாவம்?

ஒரு துண்டு வாங்குனா ஒரு துண்டு இனாம்.. இல்லை.. ஒரு புடவை வாங்குனா ப்ளவுஸ் பீஸ் இனாம்.. பனியன் வாங்குனா ஜட்டி இனாம்னு கேட்டிருக்கோம்..

அது மாதிரி ஒரு கிலோ அரிசி வாங்குனா ஒரு கிலோ அரிசி இனாம்..

அது சரி.. இதுக்கெல்லாம் ஃபைனான்ஸ் பண்றது யாருன்னு நினைக்கறீங்க?

நீங்களும் நானுந்தாங்க..

என்ன பாக்கறீங்க? Deducted at source னு சொல்லிட்டு நம்ம மாத சம்பளத்துலருந்து பிடிச்சிக்கற வரிப் பணம்தான் இப்படி தேவையற்ற வாக்குறுதிகளுக்கு மூலதனம்...

இத எல்லாம் தெரிஞ்ச மத்திய ஃபைனான்ஸ் மினிஸ்டர் வேற ‘It is feasible’னு ஹார்வர்ட் ஸ்டைல்ல ஆமோதிக்கறார்..

அதாவது மு.க சொன்னா feasible. அதையே 'ஜெ' சொன்னா கேலி பண்ண வேண்டியது.. யார் என்ன கொடுத்தாலும் நாங்க வாங்கிக்க தயார்னு நிக்கற below poverty (!) வாக்காளர்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இன்னும் என்னென்ன cess வரப்போவுதோன்னு திகைச்சி நிக்கற என்னைப் போன்ற மாச சம்பளக்காரர்கள்.

கேவலம்டா சாமி..









11 கருத்துகள்:

  1. அய்யோ, வளைச்சு வளைச்சு குத்தறாரே, யாராவது காப்பாத்துங்க..

    அப்படியும் கடைசியில் சிதம்பரத்தை தாக்கற மாதிரி அம்மாவை ஏத்திவிட்டிங்களே..

    வறுமை கோட்டுக்கு கீழே என்று சரியாக கணக்கெடுத்து இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஜோசப் சார்,
    ஒரு வழியா நீங்களும் அரசியல் ஜோதியில ஐக்கியமாயிட்டீங்க போல..வருக வருக!

    கலைஞர் ,ஜெயலலிதா ரெண்டுபேரும் நம்ம காசையே நமக்கு தர்றதா சொல்லிருக்காங்க ..ஆனா நம்ம புரட்சிப் புயல் பாருங்க..ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இவர் 35 தொகுதியில ஜெயிச்சு ஆட்சிக்கு வர முடியாது .அரசாங்கமும் அமைக்க முடியாது ..இருந்தாலும் பாருங்க ,தன் சொந்த காசுல இளைஞர்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் -ன்னு சொல்லிருக்காரு ..அவர் வாழ்க ! ஒரு சின்ன சந்தேகம் ..40 கோடி இதுக்கு பத்துமா?

    பதிலளிநீக்கு
  3. வாங்க முத்து,

    வறுமை கோட்டுக்கு கீழே என்று சரியாக கணக்கெடுத்து .../

    அதுலதாங்க பிரச்சினையே இருக்கு.. ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமே வ.கோவுக்கு கீழே இருப்பதாக கணிப்பார்களே அப்போது என்ன செய்வீர்கள்?

    என்னங்க நீங்க. என்னவோ இப்பத்தான் இதையெல்லாம் பாக்கறா மாதிரி..

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜோ,

    இவர் 35 தொகுதியில ஜெயிச்சு ஆட்சிக்கு வர முடியாது .அரசாங்கமும் அமைக்க முடியாது ..இருந்தாலும் பாருங்க ,தன் சொந்த காசுல இளைஞர்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் -ன்னு சொல்லிருக்காரு //

    அவருக்கு வாய் இருக்கு சொல்றாரு.. நமக்கு செவி இருக்கு கேக்கறோம்.. சொன்ன அவரு மறந்துருவாரு நம்மளாலத்தான் மறக்க முடியாது.. என்ன பண்றது?

    மு.கவையும் ஜெ வையும் விட்ருவோம்.. இவர என்னன்னு சொல்றது? தேர்தல் 2006 களத்தில் சிறந்த புதுமுக நகைச்சுவை கதாபாத்திரம்னு சொல்லலாமா?

    எல்லாம் நம்ம தலையெழுத்து..

    இதுல நீங்க வேற வருக, வருகன்னு வரவேற்கிறீங்க.. இது ஜோதியில்ல ஜோ.. சாக்கடை.. விழுந்து நாறிப்போகாம இருக்கணும்னு சாக்கிரதையா இருந்துக்க வேண்டியதுதான்.. ஏதோ யாரையாச்சும் வம்புக்கு இழுக்கலாமே ரொம்ப நாளேச்சேன்னு எழுதுனேன்:-)

    பதிலளிநீக்கு
  5. ஏதோ யாரையாச்சும் வம்புக்கு இழுக்கலாமே ரொம்ப நாளேச்சேன்னு எழுதுனேன்..

    ஆனா இதுவரை யாருமே மாட்டலை :-(

    என்னங்க, எல்லாரும் சோந்து போய்ட்டீங்களா என்ன?

    பதிலளிநீக்கு
  6. ஜோசப் சார், முத்து (தமிழினி) இன்னிக்கு ஒரு பதிவு போட்டிருக்காக, அத மாதிரி எல்லோரும் பாத்துட்டு //பின்னங்கால் பிடறியில் பட// ஓடிட்டாங்களோ என்னவோ.:-))

    ஸ்ரீதர்

    பதிலளிநீக்கு
  7. //சாக்கடை.. விழுந்து நாறிப்போகாம இருக்கணும்னு சாக்கிரதையா இருந்துக்க வேண்டியதுதான்.//
    சாக்கடையோ ,சந்தணமோ நாம அத விட்டு ஓட முடியாது .இது என்ன டி.வி புரோக்ராமா புடிக்கல்லின்னா அணைசுட்டு போறதுக்கு .நம்ம மாநிலத்தோட தலைவிதி .ஆட்சிக்கு யார் வந்தாலும் ஓட்டு போட்டவங்க ,எதிர்த்து போட்டவங்க ,நாங்க ஓட்டுபோடாத யோக்கியங்க-ன்னு சொல்லுற எல்லோருக்கும் ஒரே சட்டம் தான் .ஒரே பாதிப்பு தான்.

    நீங்க நினைக்குற மாதிரி யாரும் இங்க கட்சி உறுப்பினராயி கொடிபிடிக்கல .மாநிலத்துக்கு வரப்போற அதிகப்பட்ச பாதிப்ப குறைக்குறது பத்தி பேசிட்டிருக்கோம் .அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
  8. நீங்க நினைக்குற மாதிரி யாரும் இங்க கட்சி உறுப்பினராயி கொடிபிடிக்கல .மாநிலத்துக்கு வரப்போற அதிகப்பட்ச பாதிப்ப குறைக்குறது பத்தி பேசிட்டிருக்கோம்//

    !!!!!!!!

    பதிலளிநீக்கு
  9. எல்லோரும் பாத்துட்டு //பின்னங்கால் பிடறியில் பட// ஓடிட்டாங்களோ என்னவோ//

    இருக்கும் இருக்கும்.. ஏன்னா அவரப்போல 'முத்தான' பதிவுகள எழுதறதுக்கு எனக்கு வயசோ அனுபவமோ இல்லையே..

    என்ன பண்றது?

    பதிலளிநீக்கு
  10. பதிவுக்கு நன்றி...:-)

    நன்றி : தமிழினி

    பதிலளிநீக்கு
  11. நன்றி : தமிழினி //

    ?????????????

    பதிலளிநீக்கு