27 February 2006

திரும்பிப் பார்க்கிறேன் 88

நாங்களிருவரும் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய வீட்டுக்காரர் அதீத கோபத்தில் முகமெல்லாம் சிவந்து ரெஸ்ட்லெஸ்சாகக் காணப்பட்டார்.

அவரை கைநீட்டி அடிக்க முற்பட்ட வேலையாளை என்னுடைய வீட்டுக்காரரின் தோட்டத்தில் வேலை செய்யும் பணியாட்கள் இருவர் பிடித்துக்கொண்டு நிற்க நிலமை படு டென்ஷனாக காணப்பட்டது..

ஆஃப்டர் ஆல் சுற்றுச் சுவரில் ஒரு சிறு பகுதி இடிந்து விழுந்ததற்கு இத்தனை களேபரமா என்று தோன்றியது எனக்கு.

எப்படி இவரால் அரசு அதிகாரியாக பணிபுரிந்து எந்த தொழிலாளர் பிரச்சினையிலும் அகப்பட்டுக்கொள்ளாமல் ஓய்வுபெற முடிந்தது என்றும் நினைத்தேன். இதை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது..

பால்கணியில் நின்றுக்கொண்டு என்னை ஒருவித கவலையுடனும், ஒருவித எரிச்சலுடனும் பார்த்துக்கொண்டு நின்ற என் மனைவியை அண்ணாந்து பார்த்தேன். ‘இது உங்களுக்கு தேவையா?’ என்று என்னை நோக்கி வாயசைத்தார் சப்தமில்லாமல்.

நான் யோசனையுடன் என்னுடன் வந்த பாயைப் பார்த்தேன்.

ஆபத்பாந்தவன் அனாதை ரட்சகன் என்பார்களே அதுபோல்தான் அவர் எனக்கு அன்று தோன்றினார்.

இம்மாதிரியான சூழ்நிலையில் அமைதியா இருந்தாத்தான் சார் சரியான முடிவுக்கு வந்து பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று எனக்கு பலமுறை உபதேசம் செய்தவர் அன்று என்ன நினைத்தாரோ, நான் சற்றும் எதிர்பார்க்காத விதமாக கோபத்துடன் ஆண்டெனா அடிக்க வந்திருந்த கடை பணியாளரை நெருங்கி அவருடைய சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்து விட்டார்..

‘ஏண்டா.. என்ன கொழுப்பு இருந்தா ஐயா வீட்டுக்குள்ள நுழைஞ்சி அவரையே அடிக்க கை நீட்டுவே.. ஐயா வயசென்ன உன் வயசென்ன?  கொன்னுருவேன்.. போடா இங்கருந்து.. உன் மொதலாளிகிட்ட சொல்லி உன் சீட்டை கிழிக்கறனா இல்லையா பாரு..’ என்று  சீறியதுடன் அவனைப் பிடித்துக்கொண்டிருந்த வேலையாட்களின் கைகளைத் தட்டிவிட்டு அவனை விடுவித்து வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டார்.

நான் மட்டுமல்லாமல் என்னுடைய வீட்டுக்காரரும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் திகைத்துப்போய் பாயை பார்த்ததிலிருந்தே தெரிந்தது..

நான் அதிர்ச்சியுடன் பாயைப் பார்க்க அவர் மற்றவர்களுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு என்னைப் பார்த்து லேசாக கண்ணடித்தார்.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது, அவர் ஏதோ உள்நோக்கத்துடன் தான் அப்படி நடந்துக்கொண்டார் என்று.

அவர் வேலையாளை கேட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு என் வீட்டுக்காரரை நெருங்கி அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டார், ‘சார்.. அந்த முட்டாப்பயலுக்காக நா உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. உங்களப்பத்தில் நா நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அதான் மேனேஜர் சார் வந்து உங்க வீட்ல ஒரு அசம்பாவிதம் நடந்துப்போச்சி.. அதுக்கு என்னுடைய முட்டாள்தனமும் ஒரு காரணம் அதனால நீங்களும் வந்து என் வீட்டுக்காரர்கிட்ட பேசணும்னு சொன்னதும் உடனே கிளம்பி வந்தேன்..’ என்றார்.

என் வீட்டுக்காரரருக்கு அவர் வேலையாளை அடித்ததும் பிறகு இதற்கு என்னுடைய முட்டாள்தனமும் காரணம் என்று நான் பாயிடம் கூறியதாக அவர் சொன்னதும் மிகவும் பிடித்துப்போயிருக்க வேண்டும்.

உடனே அவரும் சமாதானமாகி, ‘பாய் நீங்க ------------ ரெடிமேட் கடை ஓனர்தானே? ஜோசப்போட பிராஞ்சுக்கு முன்னால இருக்கற ஷாப்?’ என்றார் புன்னகையுடன். ‘நீங்க நம்ம ஊர் ஆளு. அதனால பெரியவங்கள மதிக்கணும்னு தெரிஞ்சிருக்கு. ஜோசப் வெளியூரு.. அதான் இப்படி நடந்துக்கிட்டார்.. காலையிலேயே எங்கிட்ட இந்த மாதிரி செய்யணும்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே என் ஆளுங்கள வச்சி செஞ்சி குடுத்திறுப்பேன்.. அனாவசியமா எனக்கு இந்த நஷ்டம் ஏற்பட்டிருக்காதில்லே..’

பாய் விஷயத்தைப் புரிந்துக்கொண்டு.. ‘சார்.. அதப்பத்தி நீங்க கவலப் படாதீங்க.. இப்போ தெற்குத் தெருவுல நம்ம வீட்ல மேசன் ஒர்க் நடந்துக்கிட்டிருக்கு.. அந்தாளுங்களையே வச்சி உங்களுக்கு ஒரு செலவுமில்லாம முடிச்சிக் குடுத்துடறேன்.. மேனேஜர் சார் எங்களுக்கு செஞ்ச உதவிக்கு இதக்குட நாங்க செய்ய மாட்டோமா சார்..’ என்று சமாதானம் செய்ய என் வீட்டுக்காரர் முகமெல்லாம் மலர்ந்து, ‘ரொம்ப சந்தோஷம் சார்.. வாங்க ஒரு மோர் குடிச்சிட்டு போலாம்.. வீட்ல போட்டது.’ என்றார்

பாய், ‘இல்ல சார்.. கடையில யாரும் இல்லே..சார் வந்து கூப்டதும் அவரோட ஸ்கூட்டர்லயே பொறப்பட்டு வந்துட்டோம்.. இன்னொரு நாளைக்கு சாவகாசமா வர்றேன் சார்.’ என்று கழன்றுக்கொண்டார்.

வீட்டுக்காரர் என்னைப் பார்த்த பார்வையில் லேசான மன வருத்தம் இருந்ததுபோல் தெரியவே நானும் அவரருகில் சென்று, ‘மன்னிச்சிருங்க சார்.. காலையிலேயே உங்க கிட்ட சொல்லியிருக்கலாம்.. ஆஃபீஸ் போற அவசரத்துல விட்டுப்போச்சி.’ என்றேன்..

அந்த இரண்டு வார்த்தகளே போதுமாயிருந்தது அவருடைய கோபத்தை தணிக்க.. ‘இனிமேயாச்சும் சொல்லிட்டு செய்ங்க ஜோசப்.. வேலையாளுங்கள நம்ம கைக்குள்ள வச்சிருக்கணும்.. இல்லன்னா நமக்கு நல்லது செய்யறேன்னு சொல்லிட்டு எதையாச்சும் வில்லங்கமா செய்துட்டு வந்து நிப்பாங்க..’ என்றார் ஒரு அதிகார தோரணையில்.

நான் பல்லைக் கடித்துக்கொண்டு வெளியில் ஒரு வெற்றுப் புன்னகையுடன், ‘நீங்க சொல்றது சரிதான் சார்.’ என்று கூறிவிட்டு பால்கணியில் நின்றிருந்த என் மனைவியிடம், ‘போய் வருகிறேன்.’ என்று சைகைக் காட்டிவிட்டு என் வாகனத்தைக் கிளப்பி பாய் ஏறிக்கொண்டதும் விருட்டென்று புறப்பட்டு சென்றோம்..

நான் சிறிது தூரம் சென்றதும் சாலையின் வளைவில் அடிபட்ட வேலையாள் தலையைக் குனிந்து நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தது, ‘சார், இப்படி ஓரமா கொஞ்சம் நிறுத்துங்க.’ என்றார் பாய்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கும் புரியவே நான் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் இறங்கும் வரை காத்திருந்தேன். பிறகு இருவரும் வேலையாளை நெருங்கினோம்.

‘என்னய்யா, நா மட்டும் இடையில புகுந்து உன்ன அடிக்கறா மாதிரி அவன்கக் கிட்டருந்த மீட்கலைனா என்ன ஆயிருக்கும் தெரியுமில்லே? நீ எந்த தைரியத்துல அவர அடிக்கப் போனே? அவருக்கிற ஆள் பலம், பணபலம் தெரியுமா உனக்கு?’ என்றார் பாய்.

அவர் தலையைக் குனிந்துக்கொண்டார். ‘நீங்க சொல்றது சரிதான் பாய்.. நானும் முட்டாத்தனமா செஞ்சிட்டு அவங்க ஆளுய்ங்கெல்லாம் ஓடிவந்து என்ன புடிச்சி மரத்துல கட்டி வைக்கறதாத்தான் இருந்திச்சி.. சாரோட வீட்டம்மா என்ன நெனச்சாங்களோ தெரியல தைரியமா இறங்கி ஓடிவந்து எனக்கு முன்னால நின்னுக்கிட்டாங்க.. வீட்டுக்கார ஐயாவும் இத எதிர்பார்க்கல போலருக்கு.. சரி வுடுங்கடான்னு உங்க பேரச் சொல்லி அவர் வரட்டும் அப்புறம் பேசிக்கலாம்ன்னு வுட்டுட்டாங்க.. அம்மா நீங்க ரெண்டு பேரும் கேட்டுக்கிட்ட வந்தப்புறம்தான் படியேறி போனாங்க..’

பாய் வியப்புடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். எனக்கும் ஆச்சரியமாயிருந்தது. என் மனைவியா? பார்றா! பரவாயில்லையே..

‘சரி.. உன் நேரம் நல்ல நேரமாயிருந்திச்சி.. உன் அவசர புத்தியால உன் வேலையும் இல்லையா போயிருந்திருக்கும்? சரி.. இந்தா இத வச்சிக்க.. உன் ஜாமான்க ஏதும் அங்க கிடக்கா?’ என்றார் பாய்.

அவர் கொடுத்த பணத்தை நன்றியுடன் பெற்றுக்கொண்ட வேலையாள், ‘ஆமாங்கய்யா.. அத எடுக்காம நான் போனோ எங்கய்யாவுக்கு என்ன பதில் சொல்றது? இங்க நடந்தது ஐயாவுக்கு தெரிஞ்சா என் வேலையும் போயிரும்யா.’

பாய்க்கு மீண்டும் கோபம் வந்தது. ‘ஏன்யா.. அந்த புத்தி மொதல்ல இல்ல வந்திருக்கணும்? அவரு பெரிய மிராஸ்தார் பரம்பரை.. கோபம் வரும்.. நீ தொழிலாளியாச்சேய்யா.. முன்ன பின்ன யோசிக்க வேணாம்? சரி, ஆண்டெனா அடிக்கற வேலை முடிஞ்சிதா?’

‘எங்க பாய்? அதான் க்ளாம்ப் அடிக்கறதுக்குள்ளயே சுவர் இடிஞ்சி பிரச்சினையாயிருச்சே?’

பாய் என்னைப் பார்த்தார். ‘இப்ப என்ன சார் பண்றது?’

நான் ஒன்றும் கூறாமல் அவரையே பார்த்தேன். மறுபடியும் அத அடிக்கப் போக பிரச்சினையாகிவிடுமோ என்று யோசித்தேன்.

பாய் அதற்கும் ஒரு யோசனை வைத்திருந்தார். ‘சார் ஒன்னு பண்ணலாம்.’ என்றார்.

‘என்ன சார்?’

‘நான் நாளைக்கே நம்ம மேஸ்திரிய ஒரு கொல்த்துக்காரனோட அனுப்பறேன். அவங்க சுற்று சுவ உடைஞ்ச பகுதிய சரிபண்ணும்போதே ஆண்டெனா ஃபிக்ஸ் பண்றதுக்குண்டான யு க்ளாம்ப்பையும் சேர்த்து வச்சி கட்டிரட்டும். அப்புறம் இவரில்லாம வேற ஆளுங்கள அனுப்ப சொல்லி ஆண்டெனா ஃபிக்ஸ் பண்ணிரலாம்.’ என்றவர் வேலையாளிடம், ‘நீங்க போங்க.. நானும் சாரும் உங்க பின்னாலயே வந்து உங்க ஓனர்கிட்ட இங்க நடந்தத சொல்லாம வேற ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிக்கிறோம்.’ என்றார்.

அவர் தயங்கியவாறே, ‘ஐயா என் வேல போகாம சொல்லுங்கய்யா.. முதலாளி கோபக்காரருங்க.. சட்டுன்னு போடா வேலைய விட்டுன்னு சொன்னாலும் சொல்லிருவாருங்க..’ என்றார்.

பாய் சிரித்தவாறே, ‘ஏன்யா நீரு மட்டும் கோவத்துல குறைஞ்சவராக்கும்.. போம்.. ஒன்னும் வராம நா பாத்துக்கறேன்.’ என்று கூறிவிட்டு என் வாகன பின் இருக்கையில் ஏறி அமர்ந்தார். ‘நீங்க வண்டிய எடுங்க, சார்.. போலாம்.’

நான் வாகனத்தை முடுக்கி முக்கிய சாலையை அடைந்ததும், ‘சார் இருந்தாலும் உங்க வொய்ஃபுக்கு தைரியம் ஜாஸ்தி சார். பார்த்தா அப்படி தெரியலையே.. அவங்க மட்டும் இடையில நுழையலன்னா இவன கட்டிப்போட்டு அடிச்சிருப்பாங்க போல?’ என்றா பாய்.

நான் நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே? ஜெயலலிதா பிறந்த அதே மாதத்தில் பிறந்தவராயிற்றே.. அவர் பிப்ரவரி 24 என்றால் என் வீட்டம்மா 26! அதாவது நேற்று!!

தைரியத்துக்கு கேட்கவா வேண்டும்?

தொடரும்..


17 comments:

டி ராஜ்/ DRaj said...

//நான் நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே? ஜெயலலிதா பிறந்த அதே மாதத்தில் பிறந்தவராயிற்றே.. அவர் பிப்ரவரி 24 என்றால் என் வீட்டம்மா 26! அதாவது நேற்று//

நல்ல கொண்டாடியிருப்பீங்கன்னு நெனக்கறேன். :)எங்களது வாழ்த்துக்களை மறக்காம சொல்லிடுங்க சார். :)

tbr.joseph said...

வாங்க ராஜ்,

நேத்தைக்கு என் வீட்டம்மாவும் என் கடைசி மகளும் தூத்துக்குடியில் ஒரு விசேஷத்திற்கு சென்றுவிட்டு இன்றுதான் திரும்பி வந்தார்கள். நான் இன்று மாலை புறப்பட்டு கேரளாவிற்கு சென்று திரும்பி வர இரண்டு நாட்களாகும்..

இதில் பி.நாளை எங்கே கொண்டாடுவது?

தற்செயலாக இன்று பார்த்து அவர்களைப் பற்றி எழுதும் சூழ்நிலை வந்துவிட்டது.. இதுவே அவர்களுக்கு ட்ரிப்யூட் தானே..

அப்புறம் இருக்கவே இருக்கு Many many happy returns of the day!

நேத்தைக்கே செல்ல கூப்டு வாழ்த்தியாச்சி!!

கொண்டாடுகிறேன் பேர்வழி என்று புறப்பட்டு புது சேலை, சட்டை என்று செலவு வந்துவிடுமே.. எப்படி? :-))

Krishna said...

Oru vishayam puriyala sir. Avanga Porantha nal ( athukku vazthukkal madam, neenga nalla irukkanum enga sir munnera), athukku avangalukku saree edthukku kodukaanum, sari. Where did shirt came in this. possibly sir always used to take one shirt whenever madam takes one saree. is it so sir!!?

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

அடடா அக்காவுக்கு (நீங்க என் மனைவியை விட சின்னவராய்த்தான் இருக்க வேண்டும்) சிபாரிசா?

சட்டைன்னா blouse!

அந்த காலத்துலனா பிறந்த நாள் விசேஷன்னாத்தான் சேலை, சட்டைன்னு கிடைக்கும். இப்பத்தான் க்ரெடிட் கார்ட் காலமாச்சே.. என்னைக்குமே பிறந்த நாள்தான் விசேஷம்தானே..

நம்மக்கிட்ட கேட்டுக்கிட்டெல்லாம் இப்ப யார் எடுக்கறா?

நீங்க சொல்றது சரிதான். புருஷனா லட்சணமா மனைவியோட பிறந்த நாளைக்கு சேலை, சட்டை எடுத்துக்குடுக்கணும்..

மணியன் said...

நாங்களும் உங்கள் குடும்ப நண்பராகிவிட்டதால், அவர்களுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும். கேரளாவிலிருந்து எங்கள் சார்பாக கசவு முண்டு பரிசளிக்கவும்.

G.Ragavan said...

வீண் ஆத்திரம் வேலைக்கு உதவாது. வெளிப்பட வேண்டிய இடத்துல வெளிப்பட்டா நிச்சயம் பயன் கிடைக்கும்.

ஓ! ரெண்டு பேருக்கும் பொறந்த நாள் ஒரே நாளா...நடக்கட்டும் நடக்கட்டும்...தூத்துக்குடிக்கு சீட்டு கேக்கலாம்ல....

tbr.joseph said...

வாங்க ராகவன்..

தூத்துக்குடிக்கு சீட்டா?

அப்படின்னா? ஸ்வீட்டுன்னு அடிக்க வந்தீங்களோ?

அப்புறம், ஜெ. ரெண்டு நாளைக்கு முன்னால 24! எங்க வீட்டம்மா 26!!

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
//கடை பணியாளரை நெருங்கி அவருடைய சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்து விட்டார்..//
என்ன சார் இது? எளியவன்னா அவ்வளவு இளக்காரமா?
//இந்தா இத வச்சிக்க//
அடிக்கு கூலியா?
//அவரு பெரிய மிராஸ்தார் பரம்பரை.. கோபம் வரும்.. நீ தொழிலாளியாச்சேய்யா.. முன்ன பின்ன யோசிக்க வேணாம்?//
நல்லாயிருக்கு நியாயம்.
//ஜெயலலிதா பிறந்த அதே மாதத்தில் பிறந்தவராயிற்றே//
கிழிஞ்சுது போ.இது வேறயா? நானும் அந்த மாதத்துல தான் பொறந்துருக்கேன்.

tbr.joseph said...

வாங்க ஜோ.

//கடை பணியாளரை நெருங்கி அவருடைய சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்து விட்டார்..//
என்ன சார் இது? எளியவன்னா அவ்வளவு இளக்காரமா?

நீங்க சொல்றது நியாயம்தான் ஜோ. ஆனா பாய் மட்டும் அப்படி சாதுர்யமா நடந்துக்கிட்டு அந்த ஆளை விடுவிக்கலைன்னா எங்க வீட்டுக்காரர் என்ன செய்திருப்பாரோ யாருக்குத் தெரியும். பாய்க்கு தான் செய்தது சரியில்லைன்னு நல்லாத் தெரிஞ்சிதான் செஞ்சார். இருந்தாலும் மனசு கேக்காமத்தான் அவருக்கு பணமும் கொடுத்தார்.

கிழிஞ்சுது போ.இது வேறயா? நானும் அந்த மாதத்துல தான் பொறந்துருக்கேன்.//

அப்படியா? தேதி எப்போ? கடல்புறத்தானே மீன் ராசியா? நல்ல பொருத்தம்தான்.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
16-ம் தேதி.மத்தபடி எனக்கு ராசில்லாம் தெரியாது .நீங்க சொல்லித்தான் மீன் ராசின்னு தெரியுது.

ஜோ / Joe said...

//தூத்துக்குடிக்கு சீட்டா?

அப்படின்னா? ஸ்வீட்டுன்னு அடிக்க வந்தீங்களோ?//
என்ன சார்?என்ன தான் நீங்க மூத்தவரா இருந்தாலும் ,எங்க ராகவனுக்கு இருக்குற அரசியல் சாமர்த்தியம் உங்களுக்கு இல்லியே?

tbr.joseph said...

ஆமாம் ஜோ.. வயசுலதான் மூத்தவன். சாதா சாமர்த்தியமே இல்லை.. இது அரசியல் சாமர்த்தியம் எங்க..

ராகவன் எம்.எல்.ஏ சீட்ட சொல்லியிருக்காருன்னு நீங்க சொன்னதும்தான் இந்த மண்டைல ஏறுது..

த.நாவுக்கு ஒரு ஜெ. போறும். ரெண்டு ஜெ. இருந்தா அவ்வளவுதான்.

நம்ம வீட்டம்மா வீட்டுக்குள்ள பண்ற அதிகாரம் போறாம தூ..டியில வேற பண்ணனுமா?

ஜோ / Joe said...

//த.நாவுக்கு ஒரு ஜெ. போறும். ரெண்டு ஜெ. இருந்தா அவ்வளவுதான்.//
அதுக்கென்ன சார்.'முத்துநகர் புரட்சித்தலைவி'-ன்னு போஸ்டர் அடிச்சுட்டா போச்சு.

tbr.joseph said...

ஜோ.. நீங்க பிப்ரவரியில பிறந்திருந்தாலும் ஜெ. அம்மா ராசியில்லை..

அது பிப் 21லதான் தொடங்குது..

நீங்க அதுக்கு முந்தின aquarius ராசி..

அக்வாரியஸ்னு கூகுள்ள அடிங்க.. உங்க காரெக்டர புட்டு புட்டு வச்சிருவாங்க..

tbr.joseph said...

'முத்துநகர் புரட்சித்தலைவி'-//

பட்டம் என்னவோ நல்லாத்தான் இருக்கு..

என் வீட்டம்மாவோட ஒரு அண்ணன் ரெண்டு தம்பிங்க..

அவங்க மனைவிங்க எல்லாருமா சேர்ந்து மைனிக்கு வச்சிருக்கற பேரே சின்ன 'ஜெ'. இதுல பு.தலைவின்னு ஒரு பட்டமும் வச்சிக்கிட்டு போஸ்ட அடிச்சோம்னு வச்சிக்குங்க அவங்க மூனுபேருமே சேர்ந்து டெப்பாசிட் கூட கிடைக்காம செஞ்சிருவாங்க..

G.Ragavan said...

// அதுக்கென்ன சார்.'முத்துநகர் புரட்சித்தலைவி'-ன்னு போஸ்டர் அடிச்சுட்டா போச்சு. //

அப்படிச் சொல்லுங்க ஜோ. முத்துநகர் தந்த முத்துச்செல்வி! தூத்துக்குடியின் தவப்புதல்வீன்னு கோஷம் போட விடாம ஜோசப் சார் அடாவடி பண்றாரு :-)) பின்னே நானும் ரெண்டு உப்பளம் எப்ப வாங்குறது? நாலஞ்சு லாஞ்சி வாங்கி விட வேண்டாமா.

ஜோசப் சாருக்கு அரசியல் தெரியாது. அதுனால நானே பி.ஏவா இருந்து கவனிச்சிக்கிற மாட்டேனா! (அது சரி...மாதா கோயில்ல இருக்குறது தங்கத் தேருதான.....இழுத்திருவோம்.)

G.Ragavan said...

// அவங்க மனைவிங்க எல்லாருமா சேர்ந்து மைனிக்கு வச்சிருக்கற பேரே சின்ன 'ஜெ'. இதுல பு.தலைவின்னு ஒரு பட்டமும் வச்சிக்கிட்டு போஸ்ட அடிச்சோம்னு வச்சிக்குங்க அவங்க மூனுபேருமே சேர்ந்து டெப்பாசிட் கூட கிடைக்காம செஞ்சிருவாங்க.. //

என்ன சார்....நான் இருக்கேன்ல....தூத்துக்குடி முழுக்க நடந்து போயி...எப்படியாவது ஜெயிச்சிற மாட்டோமா..
அம்மன் கோயில்ல கூழ் ஊத்தி
மாதா கோயில்ல தேர் இழுத்து
முருகன் கோயில்ல காவடி எடுத்து
பள்ளிவாசல்ல ஓதிக்கிட்டு.....
இன்னும் யாராவது இருக்காங்களா...ஒங்க கோயிலுக்கும் வர்ரேங்க...

(சார். இதெல்லாம் உரிமைய சொல்ற ஜோக்கு. தப்பா நெனச்சிக்காதீங்க. :-)